ஹாங் காங் : 24 கண்கள் உடைய அரியவகை பாக்ஸ் ஜெல்லி மீன் கண்டுபிடிப்பு - வாவ் தகவல்! Twitter
அறிவியல்

ஹாங் காங் : 24 கண்கள் உடைய அரியவகை பாக்ஸ் ஜெல்லி மீன் கண்டுபிடிப்பு - வாவ் தகவல்!

Antony Ajay R

ஹாங்காங் நாட்டில் உள்ள மை போ தேசிய பூங்காவில் ஆராய்ச்சியாளர்கள் புதிய தனித்துவமான ஜெல்லி மீன்களைக் கண்டறிந்துள்ளனர். 

இது 24 கண்களைக் கொண்ட பாக்ஸ் ஜெல்லி மீன். இதன் தலை கனசதுர வடிவில் உள்ளது.  மிகவும் ஒல்லியானதாக காணப்படுகிறது. 

தேசியப்பூங்காவில் உள்ள ‘கெய் வாய்’ என அழைக்கப்படும் உவர் இறால் குளத்தில் இந்த ஜெல்லி மீனைக் கண்டறிந்துள்ளனர். பேராசிரியர் கியூ ஜியாவென் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இங்குள்ள அரியவகை உயிரினங்களை 2020 முதல் ஆராய்ந்து வருகின்றனர்.

ட்ரிப்பெடாலியா மைப்போன்சிஸ் ( Tripedalia Maipoensis ) என அந்த தேசியப்பூங்காவின் பெயருடன் இணைத்து இந்த ஜெல்லி மீன்களுக்கு பெயரிட்டுள்ளார் கியூ ஜியாவென்.

இப்போது இந்த ஜெல்லி மீன் இந்த தேசிய பூங்காவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் முத்து நதி முகத்துவாரத்தின் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் இது காணப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறியவியல் முறைப்படி கனசதுர வடிவிலான பாக்ஸ் ஜெல்லி மீன்கள் க்யூபோசோவா என அறியப்படுகின்றன. இது சினிடாரியா என்ற வகையைச் சேர்ந்தது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரிப்பெடாலியா மைப்போன்சிஸ், ட்ரிப்பெடாலியா குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள 4வது இனம் இதுவாகும். சில ஜெல்லி மீன்களைப் போல அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது.

இது நிறமற்றதாக, ஒளிஊடுருவக் கூடியதாக உள்ளது. சராசரியாக 1.5 சென்டி மீட்டர் நீளமானதாக இருக்கிறது. இதன் ஒவ்வொரு 4 மூலையிலும் 10 செ.மீ நீளமான கூடாரம் போன்ற அமைப்பு உள்ளது. 

இதன் 24 கண்களும் 4 தொகுதிகளாக அமைந்துள்ளது.  ஒரு தொகுதியில் 6 கண்கள். அவற்றில் இரண்டு கண்கள் மட்டுமே காட்சிகளை அமைக்கும் லென்ஸைக் கொண்டிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.  மற்றவை ஒளியை மட்டுமே உள்வாங்கும். 

சிறிய ஆனால் வேகமான, நச்சுத்தன்மையுடைய இந்த உயிரினம் குறித்து இன்னும் அதிக ஆய்வுகள் செய்யப்பட இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?