ரெட் பாண்டா முதல் ஒட்டர் வரை : உலகிலேயே Cute -ஆன 10 விலங்குகள் எவை தெரியுமா? Twitter
அறிவியல்

ரெட் பாண்டா முதல் ஒட்டர் வரை : உலகிலேயே Cute -ஆன 10 விலங்குகள் எவை தெரியுமா?

சிங்கம், புலி, சிறுத்தையைப் பார்த்தால் கம்பீரமும் அச்சமும் வருவது போல சில விலங்குகளைப் பார்த்தால் அள்ளி கொஞ்சத் தோன்றும். அப்படிப்பட்ட க்யூட்டான விலங்குகளைத் தான் பார்க்க போகிறோம்.

Antony Ajay R

விலங்குகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிங்கம், புலி, யானைப் போன்ற காட்டு விலங்குகள் தான்.

இவற்றை நினைத்ததும் நமக்கு கம்பீரமும் அச்சமும் தான் தோன்றும். யானை, காண்டாமிருகங்களை நினைத்தால் அதன் பிரம்மாண்டம் நினைவுக்கு வரும்.

நரி, கழுதைப்புலிகள் தந்திரத்துக்கு பெயர்போனவை. மான்கள் என்ற உடனே நளினமும் வேகமும் நினைவுக்கு வரும்.

இது போல அழகு என்றாலே நினைவுக்கு வரும் சில விலங்குகளும் இருக்கின்றன. உலகில் இருக்கும் ஆயிரக்கணக்கான விலங்கினங்களில் க்யூட்டான 10 விலங்குகளைக் காணலாம்...

ரெட் பாண்டா

இது மிகவும் சிறிய கண்ணைக் கவரும் பாலூட்டியாகும். இமயமலைப்பகுதிகளிலும் தென் மேற்கு சீனாவிலும் இவற்றைப் பார்க்கலாம்.

இதன் நிறமும் முக அமைப்பும் இதனை உலகின் க்யூட்டான உயிரமாக காட்டுகின்றன. இது விளையாட்டுத்தனமானதும் கூட.

கோலா

கோலா ஒரு மார்சுபியல் (Marsupial) பாலூட்டி ஆகும். கங்காரு போல முழுமையாக வளராத குழந்தையாக பிறந்து தாயின் வயிற்றில் வளரும்.

கங்காரு போல இதுவும் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது. பார்க்க டெடி பியர் பொம்மைப் போல இருக்கும். இதன் பஞ்சு போன்ற காதுகள் அசைவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இதன் சிறிய கண்களும் மரத்தில் அமர்ந்திருக்கும் பாங்கும் இதனை உலகின் க்யூட்டான விலங்காக ஆக்குகிறது.

பெண்குயின்

பெண்குயின்கள் அண்டார்டிகாவிலும் பிற பனிப்பிரதேசங்களிலும் காணப்படும் பறக்க முடியாத பறவையாகும்.

இவைப் பார்க்க இயற்கையாக கோட்-சூட் அணிந்தது போல இருக்கும். இவற்றின் குழந்தைப் போன்ற நடையை ரசிக்காமல் இருக்கு முடியாது.

அசையாக் கரடி ( Sloth )

மத்திய அமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் காணப்படும் மரத்தில் வாழும் விலங்காகும். இவை மிகவும் மெதுவாக அசையும், இரவில் மட்டுமே இரைத் தேடும் உயிரினமாகும்.

இதற்கு பெரிய கண்களும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது போன்ற முகமும் உள்ளது. இதன் சோம்பேரியான நடத்தைக்காகவே இதனை க்யூட் லிஸ்டில் வைக்கலாம்.

முள்ளம்பன்றி ( Hedgehog )

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் முள்ளம்பன்றிகள் காணப்படுகின்றன. அதன் சிறிய மூக்கு எவரையும் ஈர்த்துவிடும். பல இடங்களில் இவற்றை செல்ல பிராணியாக வளர்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஒட்டர் (Otter) அல்லது நீர்க்கீரி

ஒட்டர்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை. ஆறுகள், ஏரிகளில் இவற்றைக் காணலாம்.

இவற்றின் நேர்த்தியான ரோமங்கள், உடலமைப்பு மற்றும் விளையாட்டுத்தனத்துக்காக க்யூட்டான உயிரினமாக அறியப்படுகின்றன.

யானை

யானைகள் பிரம்மாண்டமானவை என்பது நமக்கு தெரியும் ஆனால் க்யூட் பட்டியலில் வைக்க முடியுமா எனத் தோன்றலாம் நீங்கள் ஒரு குட்டியானை விளையாடுவதைப் பார்த்திருந்தால் உங்களுக்கு அந்தக் கேள்வி எழாது.

யானைக் குட்டிகளின் அளவுக்கு மீறிய காதுகளும், பெரிய கண்களும் குறும்புத்தனமும் நம்மை ரசிக்க வைக்கும்.

பனிக்கரடி

வட அமெரிக்கா, ரஷ்யா, கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பகுதிகளில் போலார் பியர் எனப்படும் பனிக்கரடிகளைக் காணமுடியும். இவை வேகமான, சக்தி வாய்ந்த வேட்டையாடிகளாகும்.

இதன் பஞ்சு போன்ற வெள்ளை முடியும், கொழுத்த உடலும் முக அமைப்பும் இதனை அழகான உயிரினமாக காட்சிப்படுத்துகின்றன.

கடல் ஒட்டர்

பசிபிக் கடல் பகுதிகளில் கடல் நீர்க்கீரிகளைக் காணலாம். இதன் குறும்புத்தனமும் அழகான முகமும் க்யூட்டான உயிரினமாக இவற்றைக் காட்டுகின்றன.

Meerkat (கீரிப்பூனை)

தென்னாப்பிரிக்காவில் காணப்படும் சிறிய பாலூட்டிகளாகும். இதன் நடத்தையை கவனித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.

க்யூட்டாகவும் குறும்புத்தனமானதாகவும் இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?