508B Twitter
அறிவியல்

உயிர்வாழ தகுதியான மண்டலத்தில் Super-Earth கண்டுபிடிப்பு - விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தபடி

சூரியக்குடும்பத்துக்கு வெளியில் மற்றொரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்கள் புறக்கோள் அல்லது எக்ஸோபிளானட் எனப்படுகின்றன. அப்படியான எக்ஸோபிளானட் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுற்றிவரும் நட்சத்திரத்திடம் இருந்து உயிர்வாழத் தகுதியான மண்டலத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Antony Ajay R

பிரபஞ்சம் மனிதர்களுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் பல அதிசயங்களை அறிவியலின் துணைகொண்டு அறிவது மிகச் சுவாரஸ்யமானது. அந்த சலிப்பில்லாத பயணத்தின் புதிய கண்டுபிடிப்பாக ‘மங்கிய சிகப்பு நட்சத்திரத்திலிருந்து உயிர்வாழத் தகுதியான தொலைவில் ஒரு கோள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்’.

சூரியக்குடும்பத்துக்கு வெளியில் மற்றொரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்கள் புறக்கோள் அல்லது எக்ஸோபிளானட் எனப்படுகின்றன. அப்படியான எக்ஸோபிளானட் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு சூப்பர் - எர்த் எனவும் கூறப்படுகிறது. ஒரு எக்ஸோபிளானட் -ன் அளவை வைத்து அது சூப்பர்-எர்த் எனப்படுகிறது. பூமியை விடப் பெரிதாக அதே நேரத்தில் நம் சூரியக்குடும்பத்தின் பனிக் கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனை விடச் சிறியதாக இருக்கும் கோள்கள் சூப்பர் எர்த். இதற்கு முன்னரும் சில சூப்பர் எர்த் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள் அது சுற்றிவரும் நட்சத்திரத்திடம் இருந்து உயிர்வாழத் தகுதியான மண்டலத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபஞ்சம்

இந்த கோளுக்கு 508பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது நம் பூமியிலிருந்து 36.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது நமது பூமியை விட நான்கு மடங்கு அதிக நிறை உடையது. எனவே இதில் வாயுக்களை விடப் பாறை உள்ளிட்ட கூறுகள் அதிகம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மங்கிய சிகப்புநிற சிறிய நட்சத்திரத்தைச் சுற்றிவருகிறது.

என்ன இருந்தாலும் இந்த கோளில் உயிர்கள் எதுவும் வசிக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த கோளை கண்டுபிடித்ததன் மூலம் மங்கிய நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கோள்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் வெற்றியடைந்திருக்கிறது.

NOAJ சுபாரு தொலைநோக்கி ( NOAJ Subaru Telescope ) மூலம் இந்த கோள் கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்த கோள் 10.75 நாட்களில் நட்சத்திரத்தைச் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. இந்த சிறிய இடைவெளியில் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறதென்றால் அது அவ்வளவு அருகில் இருக்கிறது என்று பொருள். ஆனால் அந்த நட்சத்திரம் நம் சூரியனை விட மங்கியதாக இருப்பதனால் பூமியை விட 1.4 மடங்கு மட்டுமே அதிக சூரிய கதிர்களைப் பெருகிறது.

இந்த கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் மங்கிய நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கும் கோள்களைக் கண்டறிய உதவும். இதுவரை விண்வெளியில் கண்டறியப்பட்டுள்ள கோள்கள் சுற்றிவரும் நட்சத்திரங்களில் இது தான் மிக மங்கியது. இது சூரியனின் எடையில் 18% மட்டுமே உடையது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?