ஆண்களை விட பெண்கள் தான் சோகமாக இருக்கிறார்களா? ஆய்வில் புதிய தகவல்!  Canva
அறிவியல்

ஆண்களை விட பெண்கள் தான் சோகமாக இருக்கிறார்களா? ஆய்வில் புதிய தகவல்!

நாட்டில் பெரும்பாலும் பெண்கள் இன்றும் வீட்டில் குழந்தைகளையோ அல்லது வயது முதிர்ந்தவர்களையோ பார்த்துகொள்பவர்களாக தான் இருக்கிறார்கள். சிலருக்கு அலுவலக பணி, வீட்டு வேலை என்ற இரண்டு பொறுப்புகளும் உள்ளன.

Keerthanaa R

சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் சோகமாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன, இதனை எப்படி மாற்றுவது என்பதையும் உளவியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

அமெரிக்க உளவியல் சங்கம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் பெரும்பான்மையான அமெரிக்க பெண்கள், இந்த சமூகம் தங்களை எப்படி பார்க்கிறது, நடத்துகிறது என்பது போன்ற விஷயங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனமுடைந்து உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது

நாட்டில் பெரும்பாலும் பெண்கள் இன்றும் வீட்டில் குழந்தைகளையோ அல்லது வயது முதிர்ந்தவர்களையோ பார்த்து கொள்பவர்களாக தான் இருக்கிறார்கள். சிலருக்கு அலுவலக பணி, வீட்டு வேலை என்ற இரண்டு பொறுப்புகளும் உள்ளன.

வேலைக்கு செல்வோரில், ஐந்தில் மூன்று பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை, மரியாத குறைவான நடத்தை ஆகியவை நடக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்தில், அதிகமாக பெண்களே தங்கள் வேலைகளை விட்டு வீட்டின் பொறுப்புகளை எடுத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், ஒரு சங்கடத்தில் இருந்து எளிதாக தங்களை தேற்றிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றதும் பெண்கள் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இதுவும் ஒரு விதத்தில் இந்த சமூகம் அவர்களை அந்த நிலைக்கு தள்ளியிருப்பதன் விளைவே என்று சந்தேகிக்கின்றனர்.

எப்போதுமே, பெண்கள் தங்களின் தேவைகளை விட, அடுத்தவரின் தேவைக்காக யோசிக்க கற்றுத்தரப்படுவது தான், அவர்களை ஒரு மனக் கஷ்டத்தில் இருந்து எளிதாக விடுபட உதவுகிறது என்று கணிக்கின்றனர்.

பெண்கள் சந்தோஷமாக இருக்கவும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும், உளவியலாளர்கள் சில வழிகளை குறிப்பிடுகின்றனர்

தெரப்பி செல்லலாம்

பெண்கள் அவர்கள் மனதில் நினைப்பதை, வெளிப்படையாக பேச அவர்களுக்கு என்று ஒரு நிலையை உருவாக்கி கொள்ள இந்த தெரப்பி உதவும்.

இதற்காக மன நல மருத்துவரையே அணுக வேண்டும் என்பது அவசியம் இல்லை. கிரியேட்டிவ் ஆர்ட், இசை, அல்லது தங்கள் மனதை இளகச் செய்யும் எந்த ஒரு செயலையும், அவர்கள் செய்யலாம். அல்லது மனிதர்களுடன் உரையாடலாம்.

இயற்கையுடன் கைக்கோர்க்க

அடைத்து வைத்த நாலு சுவற்றுக்கு மத்தியில் இருந்தால், மூச்சு திணறுவது போல இருக்கும், வெளியில் சென்று இயற்கையோடு ஒன்றலாம்.

ரிலாக்ஸாக வாக்கிங் சென்று வரலாம், செடிகள் வளர்க்கலாம், அமைதியான இடங்களுக்கு சென்று தியானம் போன்றவற்றை செய்யலாம். இதனை செய்யும் பெண்கள் தேவையற்ற சிந்தனைகள் இன்றி தெளிவாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்

உடம்புக்கு வேலை

ஏதாவது ஒரு வேலையில், உடலை அசைத்தவாறு இருக்கும் பெண்களின் அறிவாற்றல் மேம்படுவதாக கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்யும் பெண்கள் அதிக நாட்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?