வாயேஜர் ஸ்டேஷன்  Twitter
அறிவியல்

விண்வெளியில் ஓர் அற்புத சொகுசு ஹோட்டல்; 2025ல் திறக்க முடிவு - என்ன சிறப்பம்சம் தெரியுமா?

NewsSense Editorial Team

பொதுவாக ஓரளவுக்குப் பணம் படைத்தவர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது வழக்கம். ஒரு தமிழக நடுத்தரக் குடும்பம் ஆண்டுக்கு ஒரு முறை ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவார்கள்.

மேல் நடுத்தர குடும்பம் என்றால் சிம்லா, டார்ஜிலிங், குளுமணாலி போன்ற ஊர்களுக்குச் சொகுசாக ரயிலிலோ விமானத்திலோ பயணித்து வீடு திரும்புவார்கள்.

அவர்களை விட பெரும் பணம் படைத்தவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இன்ஸ்டாகிராமில் அதைப் பதிவிட்டு மற்றவர்களைப் பெருமூச்சுவிட வைப்பார்கள்.

இனி கௌதம் அதானி, முகேஷ் அம்பானி போன்ற மிகப்பெரிய பணக்காரர்கள் சுற்றுலாவுக்கு வெறுமனே ஜெர்மனி, பிரான்ஸ்... போன்ற நாடுகளுக்கு மட்டும் சுற்றாமல் விண்வெளிக்குக் கூட சென்று சுற்றிப்பார்த்து ஒரு சொகுசு ஹோட்டலில் தங்க ஒரு நிறுவனம் வழிவகை செய்திருக்கிறது.


விண்வெளிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது சரி அது என்ன விண்வெளியில் தங்குவது என்று கேட்கிறீர்களா...?

பயோனியர் ஸ்டேஷன்

அதைத்தானா 'ஆர்பிடல் அசெம்பிளி' என்கிற நிறுவனம் செய்து காட்டியிருக்கிறது. விண்வெளியில் ஒரு சொகுசு ஹோட்டலைக் கட்டமைத்து அதை 2025 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறது அந்நிறுவனம். அந்த ஹோட்டலின் பெயர் 'பயோனியர் ஸ்டேஷன்'. இந்த சொகுசு ஹோட்டலில் அதிகபட்சமாக 28 பேர் தங்கலாம்.

இந்த சொகுசு ஹோட்டல் பொதுவாக விண்ணில் ஏவப்படும் செயற்கைக் கோள்களைப் போல பூமியைச் சுற்றி வரும்.

அடேங்கப்பா விண்வெளியில் ஒரு ஹோட்டலா? பிரமாதம் போங்க... என்று நாம் பெருமூச்சு விட்டு வாயைத் திறப்பதற்குள்... 400 பேர் தங்கும் வசதி கொண்ட 'வாயேஜர் ஸ்டேஷன்' என்கிற சுற்றுலா விண்வெளி மையத்தையும் அதே ஆர்பிடல் அசெம்பிளி நிறுவனம் கட்டமைத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் வாயேஜர் ஸ்டேஷன் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் வெறுமனே விண்வெளியில் சுற்றுலா மையங்களைக் கட்டமைப்பதோடு நின்றுவிடாமல், வியாபார பூங்காக்கள், வீடுகள், அலுவலகங்கள், ஆய்வு மையங்கள் எனப் பல திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்களாம். பிரம்மாண்டமாக இந்த கட்டிடங்களை எல்லாம் விண்வெளியில் கட்டிவிட்டு அதை வாடகைக்கு விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

விண்வெளி வீரர்

பூமியில் சொகுசு ஹோட்டல்கள் எப்படி இருக்குமோ அதே போல பயோனியர் ஸ்டேஷன் மற்றும் வாயேஜர் ஸ்டேஷன் ஹோட்டல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்த சொகுசு ஹோட்டலில் விண்வெளி மையங்களில் கூட இன்னும் புழக்கத்தில் வராத செயற்கை புவியீர்ப்பு விசை வசதியும் இருக்கும் என ஆர்பிடல் அசெம்பிளி நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்வெளி சுற்றுலா என்கிற சொல், வெர்ஜின் கெளாக்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன், ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தை சேர்ந்த ஜெஃப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எலான் மஸ்க் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களால் படு பிரபலம் அடைந்து வருகிறது எனலாம்.

ஆனால் இந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும், வணிகரீதியில் எப்படிச் சரிப்பட்டு வரும் என்பது குறித்து எந்த ஒரு தெளிவான விவரங்களும் இல்லை.

1980கள் மற்றும் 1990களில் பிறந்த தலைமுறையினர் விண்வெளிக்குச் சுற்றுலா மேற்கொள்வார்களோ இல்லையோ, அவர்களின் பேரன் பேத்திகளாவது விண்வெளி சுற்றுலாவை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?