கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியைக் கேட்டதும் நினைவுக்கு வருவது எறும்புகள் தான். ஒரு சிறிய எறும்பு அதன் ஒரு கடியில் நம் ஒட்டுமொத்த நாளையும் எரிச்சல் மிகுந்ததாக மாற்றிவிடும்.
நம் வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகளில் மிகவும் டேஞ்சரானவை எறும்புகள் தான். ஆனால் அந்த சித்தெறும்புகள் எல்லாம் ஜுஜுபி என சொல்லவைக்கும் படியான பெரிய எறும்புகளை மரங்களில் காணலாம்.
காடுகளில் இன்னும் மோசமான பெரிய எறும்புகள் இருக்கும். மொத்தம் 12000த்துக்கும் மேலான எறும்பு வகைகள் உலகில் இருக்கின்றன.
இவற்றில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது புல்டாக் எறும்பு தான். Myrmecia pyriformis என்பது இவற்றின் அறிவியல் பெயர்.
இந்த எறும்புகளை ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளில் காணலாம்.
இவைக் கடிக்கும் போது கொடுக்கு மற்றும் தாடையைப் பயன்படுத்தி அழுத்தமாக தாக்கும்.
இந்த எறும்புகள் கடித்ததனால் மனித உயிரிழப்புகள் கூட நடந்திருக்கின்றன.
இந்த எறும்பு மிகவும் முரட்டுத்தனமாகவும் பலமாகவும் கடிப்பதனால் இதற்கு புல்டாக் என்று பெயர் வந்தது.
இந்த கோவக்கார குணாதீசியம் மனிதர்களையும் அச்சுறுத்துகிறது. புல்டாக் எறும்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம்மை மீண்டும் மீண்டு கடிக்கும். இதனால் அதிகப்படியான விஷம் உடலுக்குள் செல்லும்.
ஒரு வளர்ந்த நபரின் உயிரைப் பறிக்க புல்டாக் எறும்புகளுக்கு 15 நிமிடங்கள் போதும் எனக்கூறப்படுகிறது.
ஒரு புல்டாக் எறும்பு 20 மில்லி மீட்டர் நீளம் இருக்கும். இதன் சராசரி எடை 0.015 கிராம். 21 நாட்கள் வரை உயிர் வாழும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust