ரம்ஜான்

 

Twitter

ஆன்மிகம்

ரமலான் 2022: என்று தொடங்கி என்று முடிகிறது? முக்கிய தகவல்கள்

அரபு நாட்டு வானியல் அமைப்பின்படி, ஏப்ரல் 2 ஆம் தேதி ரமலான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Antony Ajay R

ரம்ஜான் மாதம் நெருங்கிவிட்ட நிலையில், அது எப்போது தொடங்கப் போகிறது, நோன்புகள் எவ்வளவு காலம் இருக்கும், ஈத் எப்போது குறிக்கப்படும் என்ற கேள்விகள் எழும். ரம்ஜான் 2022 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே காண்போம்.


ரமலான் எப்போது தொடங்குகிறது?

அரபு நாட்டு 'வானியல் குழு'வின் அறிவிப்பின்படி, ரம்ஜான் ஏப்ரல் 2, 2022 அன்று இருக்க வாய்ப்புள்ளது. எனினும், அரபு நாட்டில் உள்ள 'பிறை பார்க்கும் குழு' ரமலான் மாதத்தின் பிறை நிலவுக்குப் பிறகுதான் ரமலான் தொடங்கும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நோன்பு எவ்வளவு காலம் இருக்கும் ?

அரபு நாட்டு வானியல் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வானின் கூற்றுப்படி, ரமலான் நோன்பின் காலம் தொடக்கத்தில் நோன்பு நேரம் 13 மணி 46 நிமிடங்களாக இருக்கும். மாத இறுதியில், 14 மணி 28 நிமிடங்களாக அதிகரிக்கும்.

Ramalan

ரமலான் மாதத்தில் வேலை நேரம் எவ்வாறு இருக்கும்?

மார்ச் 15 அன்று, மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தனியார் துறையினருக்கு, ரமலானின் போது ஒவ்வொரு நாளும் வேலை நேரத்தில் இரண்டு மணிநேரம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னதாக, அரபு நாட்டு அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கும் ரம்ஜான் வேலை நேரத்தை அறிவித்தது. அதன்படி, ரம்ஜான் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும்,

வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் இருக்கும்.


ஈத் அல் பித்ர் எப்போது?

ரமலான் மாதத்தின் இறுதியில் "ஈத் அல் பித்ர்" உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டது போல, அரபு நாட்டின் பிறை பார்க்கும் குழு பிறை நிலவைப் பார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே ரமலான் தொடக்கம் மற்றும் முடிவின் உண்மையான தேதி அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், இப்ராஹிம் அல் ஜர்வானின் கூற்றுப்படி, வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 30 நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஈத் அல் பித்ர் மற்றும் ஷவ்வால் முதல் நாள் (ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலானைத் தொடர்ந்து வரும் மாதம்) வியாழன், மே 2, 2022 அன்று இருக்கும்.

அரபு நாட்டு அரசாங்க இணையதளத்தில், விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, ஈத் அல் பித்ர் விடுமுறைகள் ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை இருக்கின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?