எந்த ஒரு பொருளோ, படமோ பார்க்கிற நமக்கு இருவேறு வடிவங்களையோ, உணர்வுகளையோ தந்தால் அது விழிக்காட்சி மயக்கம் அல்லது காட்சிப்பிழை (Optical Illusion) என்றழைக்கப்படுகிறது. நம்மில் பலரும் அவ்வாறு மனதைக் குழப்பும் பொருட்களைக் கண்டுணர சில மணித்துளிகள் செலவிட்டிருப்போம். அப்பாடியான பொருட்கள் திடீரென்று இணையத்தில் வைரலாவது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது.
காட்சிப் பிழைகள் பல நூற்றாண்டுகளாகவே இருப்பவை தான். கலைஞர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களும் நீண்ட காலமாக அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் இந்து வழிபாட்டுத் தலமாகும். மேலும் இது 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சோழ வம்சத்தின் பொக்கிஷமாகும். 12-ஆம் நூற்றாண்டின் திராவிட கட்டிடக்கலை மற்றும் தேர் மற்றும் பிரமாதமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
இந்த படத்தில், ஒரு தலையுடன் இணைந்த இரண்டு உடல்களுடன் ஒரு விலங்கு தெரிகிறது. இதில், நீங்கள் எந்த மிருகத்தைப் பார்க்கிறீர்கள்?
வலதுபுறத்தில் உள்ள விலங்கைப் பார்த்தால், நீங்கள் ஒரு யானையைப் பார்க்கலாம். ஆனால், நீங்கள் யானையின் உடலையும் கால்களையும் மூடிக்கொண்டால், இடதுபுறத்தில் வானத்தை நோக்கிப் பார்ப்பது போன்ற காளையைத் தெளிவாகக் காணலாம்.
காளையானது நந்தி எனப்படும் சிவபெருமானின் வாகனம். ஐராவத் ஒரு புராணத்தில் கூறப்படும் வெள்ளை யானை. இது சொர்க்கத்தின் ராஜாவான இந்திரனின் வாகனம்.
தற்போது நாம் அடிக்கடி பார்க்க நேரிடுகிற காட்சிப் பிழைகள் மென்பொருளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படுகிறது, ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கல்லைப் பயன்படுத்தி அதைச் செய்து காட்டியிருக்கிறார்கள் கலைஞர்கள். 16-ஆம் நூற்றாண்டில் ஹான்ஸ் ஹோல்பீன் தி யங்கர் வரைந்த ஓவியம் தான் மிகப் பழமையான காட்சிப் பிழை என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த ஐராவதேஸ்வரர் கோயில் ஒளியியல் மாயை சிற்பம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust