பல 80s,90s கிட்ஸ்களின் பெருமிதமான கவலைகளில் ஒன்று திருமணம் தான். இன்றும் அசராத நம்பிக்கையில் வரன் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அரியதொரு வாய்ப்பு இந்த “பங்குனி உத்திர திரு நாள்” . ஆம் 2022வது ஆண்டில் மார்ச் 18ம் தேதியில் வரும் பங்குனி உத்திர திரு நாளுக்கும் திருமணங்களுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. வரலாற்று ரீதியாக, புராண, இதிகாசங்கள் எனப் பலவற்றிலும் சிறப்பு வாய்ந்தது இந்த திரு நாள். வழக்கமாக நம்மூர்களில் சித்திரைத்திருவிழா, மாசி, பங்குனி விழாக்கள் என கலகலப்பாக இருக்கும். ஆனால் கல்யாண வரமருளும் திருவிழா என்றால் அது பங்குனி உத்திர பெறு நாளே ஆகும்.
திருமண வரம் தரும் ஆலயங்களை தேடித்தேடிப்போய் பரிகாரங்கள் செய்து வருவோரும் உண்டு கிடைப்பதுதான் கிடைக்கும் என ஏதோ ஒரு நம்பிக்கையில் இருப்பவர்களும் உண்டு. சரி, முயற்சித்து தான் பார்ப்போமே என விரதமிருந்தோருக்கு கூட கைகூடிய பலன்கள் ஏராளம் ஏராளம். அப்படி விரதம் இருந்து, தன்னை வருத்திதான் வரம் பெற வேண்டுமா என்று கேட்பவர்களும் உண்டு. விரதம் இருப்பதே, அன்றைய நாள் முழுவதும், எந்த சங்கல்பத்தை வைத்தோமோ, அதை பற்றி மட்டுமே.. அது நிறைவேறுதல் பற்றி மட்டுமே எண்ணங்கள் இருக்க விரதம் கை கொடுக்கும். உடல் சார்ந்த மாற்றங்கள், ஹார்மோன்கள் என்றாலும் கூட எண்ணங்கள் வழியே, நினைத்ததை ஈடேற்ற கை கொடுப்பது விரதங்களே..
அப்படி என்னவெல்லாம் சிறப்புகளுண்டு பங்குனி உத்திரத்திற்கு.. கேட்டால் மிரண்டு போவீர்கள்!
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் ,பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இந்த பங்குனி உத்திர விழாவின் முக்கியமான சிறப்பு, தெய்வானையை முருகன் மணம் புரிந்த நாளாக இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. வள்ளி அவதரித்த திருநாளாகவும் இந்த நாளில் சிறப்புற அமைந்துள்ளது. தமிழ் முனிவரான அகத்திய மாமுனிவர் லோபமுத்திரை திருமணம் செய்துகொண்ட நாள் இந்த பங்குனி உத்திர நாள். சுவாமி அய்யப்பன் பூரணை புஷ்கலா தேவி திருமணம் செய்து கொண்ட நாளாகவும் பங்குனி உத்திர நாள் கருதப்படுகிறது. ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம். இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.
ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் பல கோயில்களில் பிரம்மோற்சவம் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து நாட்கள் நடைபெறுகின்ற திருவிழா பெருவிழா, இந்த பிரம்மோற்சவ விழாவாகும். அருகில் சில கோயில்களில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள் பங்குனி உத்திர நாளன்று மாவிளக்கு பூஜை குலதெய்வத்தையும் தங்களுடைய தெய்வத்தையும் வணங்கத் திருமணத் தடைகள் விலகும் விளக்கில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை அதுபோலவே திருமகள் போன்ற மருமகள் கிடைப்பாள் அல்லது திருமால் போன்று திருமகன் கிடைப்பார் என்கின்ற நம்பிக்கை உண்டு அதனால் இந்த பங்குனி உத்திர நன்னாளில் பல இடங்களில் சிறப்பான திருவிளக்கு பூஜையும் நடப்பது உண்டு.
ஆண்டாள் ரங்கமன்னார் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் நாள் பங்குனி உத்திரத் திருநாளே என்று புராணங்கள் மூலம் அறிகிறோம் . திருமணமாகாத திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்லாமல் இருப்பவர்களைச் சிறப்பாக வாழ வைப்பதோடு இறந்தவர்களையும் எழுப்ப வல்ல சக்தி கொண்ட நாள் இந்த பங்குனி உத்திர நாள். மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால், இறைவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டார். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாள் இந்த பங்குனி உத்திர நாள். இந்த விரதத்தை மேற்கொண்டதன் காரணமாக விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றார் இந்திரன் இந்திராணியை பெற்றதும் பிரம்மன் சரஸ்வதியை தன்னுடைய நாவில் வைத்திருக்கும் பேறும் பெற்றார். சபரிமலை ஐயப்பனின் அவதார திருநாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். முருகனுக்குத் திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவடி, சேவற் காவடி போன்றவை உலகப் பிரசித்தி பெற்றது. திருக்கழுக்குன்றம் அஷ்டகந்த திரிபுரசுந்தரி அம்மனுக்கு மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு மூன்று நாட்களில் மட்டுமே உச்சி முதல் பாதம் வரை முழு அபிஷேகம் நடைபெறும். அதில் ஒரு நாள் பங்குனி உத்திரம்.
ஜோதிட ரீதியாக பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருக்கும் அப்போது சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் கன்னி ராசியிலிருந்து பரிபூரண ஒளி பெற்று பூமிக்கு தன்னுடைய முதலில் ஒளியையும் கொடுப்பதால் பங்குனி உத்திரம் சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது
பங்குனி உத்திரம் விரதம் இருந்து மகாலட்சுமி நாராயணனின் மலர்க்கரம் பிடித்ததைப் போல நம் பெண்கள் நம் வீட்டுப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதத்தின் மூலம் நல்ல துணைவர் கிடைக்கப் பெறுவர். வற்றாத செல்வமும் உண்டாகும்
பங்குனி உத்திரம்
முதலாம் பராந்தகன் காலத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் முதலாம் பராந்தக சோழன் கிபி 970 ஆயிரத்து 53 ஒன்பது ஜீரோ ஏழு முதல் 953 பங்குனி உத்திரத் திருநாள் பற்றிய குறிப்பு கொண்ட முதலாம் பராந்தகசோழ காலத்து கல்வெட்டுகள், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது வேங்கட தேவராயர் காலத்து கல்வெட்டு ஒன்றிலும் பங்குனி உத்திர திருவிழா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆதி பிரம்மா திருநாள் பூபதி திருநாள், விருப்பன் திருநாள் போன்ற பல திருவிழாக்கள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் நிவந்தங்கள் பற்றிய குறிப்புகள் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ளன. அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சோழர்காலக் கோயிலில் கல் தூண் ஒன்றில் பங்குனி உத்திரம் குறித்த சிறப்புகள் காணப்படுகிறது. மாறனேரி பசுபதீஸ்வரர் கோயில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. முன் மண்டபத்தில் உள்ள தூணில் சில கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகின்றன கார்த்திகை முதல் பங்குனி உத்திரம் வரையில் நாள்தோறும் இரண்டு வேளைக்கு நெருப்பு இடவேண்டும். பங்குனி உத்திரம் தொடங்கி ஆடி உத்திராடம் வரையில் வெயில் காலத்தில் நாள்தோறும் இரண்டு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். இந்த பணிகளைச் செய்யும் அம்பலம் அட்டுவானுக்கு, அதே பகுதியில் சமுத்திரம் வாய்க்கால் முதல் கோவத்தக்குடி எல்லை வரை உள்ள நிலங்களை தானமாக வழங்கப்பட்டுள்ளது என்று அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வழங்கியவர் கோபர கேசரி வர்மா என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குனி உத்திரத்தன்று மணம் ஆகாதவர்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணங்களில் தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா பகல் பொழுது உணவு உட்கொள்ளாது இரவில் பால் பழம் போன்ற உணவுகளை உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பர் இதனை கல்யாணசுந்தரம் சுந்தர விரதம் என்று அழைப்பார்கள். இயலாதோர், அன்று அருகிலுள்ள ஆலயங்களுக்கு சென்று மனமுருகி பிராத்தித்து வழிபட்டு, இயன்ற தான தர்மங்களையேனும் செய்யலாம்.
பல மாவட்டங்களில் தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .அறுபடை வீடுகளான பழனி திருச்செந்தூர் சுவாமிமலை போன்ற கோயில்களில் மட்டுமல்லாமல் அனைத்து சிவன் கோயில்களிலும், முருகனாலயங்களிலும், சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்று வருகிறது