முன்னோர் வழிபாடு

 

Twitter 

ஆன்மிகம்

இன்று தை அமாவாசை : இந்த மாதத்தில் வரும் அமாவாசை ஏன் முக்கியமாக கருதப்படுகிறது ?

மாதத்துக்கு ஒரு நாள் அம்மாவாசை அன்று நாம் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதிலும் ஆடி - புரட்டாசி - தை மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமான அமாவாசையாகும்.

Newsensetn

நமக்கு மூத்தவர்கள் இருக்கும் போது நம்முடன் இருந்து நம்மை செம்மைப்படுத்தவும், நல்லறிவு கொடுக்கவும் ஆலோசணை வழங்கி உறுதுணையாக இருப்பது வழக்கம். அவர்கள் மறைவுக்கு பின்னர் பித்ரு லோகத்தில் இருந்து நம் வாழ்வுக்குச் சகல அருளையும் வழங்கக்கூடிய நிலையை அடைவார்கள். இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாகும்.

மாதத்துக்கு ஒரு நாள் அம்மாவாசை அன்று நாம் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதிலும் ஆடி - புரட்டாசி - தை மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமான அமாவாசையாகும். சூரியனுடைய பாதை 6 மாதத்திற்கு ஒரு முறை மாறும். இதில் வடக்கு பயண பாதை தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயன புண்ணிய காலமாகும். அதாவது தெற்கு நோக்கிய பயண பாதையாகும். இதில் தை மாத அமாவாசை மிக சிறப்பு வாய்ந்தது. இன்றைய நாளில் முன்னோர்கள் வழிபாடு செய்வது நம் சந்ததிகளுக்கு நல்லது.

வருடத்தின் எல்லா அம்மாவாசையும் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் அளவு நல்ல நாள் தான். முன்னோர்களை வணங்கும் விரத நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவம் :

நம் பெற்றோர், குல தெய்வம், முன்னோர்களை வணங்க்கி ஆரம்பிக்கும் எந்த செயலும் தோல்வியடையாது. ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து நம் முன்னோர்காளை வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசியைப் பெற முடியும்.

தர்பணம் கொடுத்தல்

தர்பணம் கொடுத்தல் :

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம். அத்துடன் இந்த அமாவாசை தினத்தின் போது அரிசி - பருப்பு - தாம்பூலம் - ஆடைகள் ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது.

காகங்களுக்கு உணவு

காகங்களுக்கு உணவு:

தை அமாவாசை தினமான இன்று, நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பின் காகத்திற்கு உணவு படைத்து, அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். காகங்கள் நாம் படைத்ததை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது நம்பிக்கை.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைத்து, தீராத பிரச்சனைகள் தீரும். சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் மன அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும் :

அமாவாசை அன்று யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆனால் தர்ப்பணம் என்பது தந்தையார் இல்லாதவர்கள் மட்டுமே செய்ய முடியும். மற்றவர்கள் முன்னோர்களை வணங்கி தானம் செய்தால் போதுமானது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?