பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் - ஒரு சுவாரஸ்ய கிரிக்கெட் வரலாறு! Twitter
ஸ்போர்ட்ஸ்

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் - ஒரு சுவாரஸ்ய கிரிக்கெட் வரலாறு!

Keerthanaa R

ஆகஸ்ட் 14, 15ல் இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாக பிரிந்தது தேசம். அதன் பிறகு 1971ல் இந்தியா பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது.

இந்த பிரிவினையின் போது, அரசியல் ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இந்தியாவில் வாழ்ந்து வந்த இஸ்லாம் மதத்தவர்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர். ஒரு சிலர் இந்தியாவிலேயே கூட தங்கிவிட்டனர். ஆனால் பெரும்பாலும் இந்து மதத்தவர்களே இந்தியாவில் இருந்தனர்.

இதனால் குடும்பங்கள் உடைந்தன. கலவரங்கள் வெடித்தன. வன்முறைகள் நடந்தன. கண்ணீர் காடாக நாடுகள் மாறியது என்ற வரலாறு எல்லாம் என்றும் மறக்க முடியாதவை.

இந்த பிரிவினையால் பாதிக்கப்பட்ட துறைகளில் விளையாட்டும் ஒன்று, குறிப்பாக கிரிக்கெட். இன்று வரை, இந்தியா பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டியில் மோதுகிறது என்றால் அது தேசப்பற்றின் வெளிபாடாகவே இரு நாடுகளிலும் பார்க்கப்படுகிறது.

1932ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆனால் 1952ல் தான் அணியால் முதல் வெற்றியைக் கைப்பற்ற முடிந்தது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் விளையாடி வந்ததால், அணியில் எல்லா மதத்தின் வீரர்களும் இடம்பெற்றிருப்பார்கள் தானே?

அவர்களில் ஒரு சிலர் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடினர்.

அப்படி இந்திய அணிக்காகவும், பாகிஸ்தான் அணிக்காகவும் விளையாடியவர்கள் யார் யார்?

அமீர் இலாஹி

1947ல் இந்திய அணிக்காக விளையாடினார் அமீர் இலாஹி. இவர் இந்திய அணியின் லெக் பிரேக் பந்துவீச்சாளராக இருந்தார். அறிமுகமான புதிதில் அமீர் மீடியம் பேஸ் பௌலராக இருந்தார். 1947ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார் அமீர்.

பின்னர் பாகிஸ்தானுக்காக 1952 முதல் 1953 வரை விளையாடினார். 44 போட்டிகளில் மொத்தம் விளையாடி பின்னர் ஓய்வை அறிவித்தார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகப் பிரபலமாக இருந்த இவர், மொத்தம் 119 முதல் தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடியிருக்கிறார். 506 விக்கெட்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

குல் முகமது

இடது கை பேட்டர், பந்துவீச்சாளர், ஒரு அற்புதமான ஃபீல்டர் என பன்முகத் தன்மையைக் கொண்டிருந்தார் குல் முகமது. இந்தியாவுக்காக 1946 முதல் 1955 வரை குல் முகமது விளையாடினார். 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இரு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடினார்.

அதன் பிறகு 1956ல் ஒரே ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்காவும் விளையாடினார். இப்போட்டி கராச்சியில் நடைபெற்றது. தனது இறுதிக் காலத்தில் லாகூரில் கிரிக்கெட் நிர்வாகியாகவும் செயல்பட்டார் குல் முகமது

அப்துல் காதர்

அப்துல் ஹஃபீஸ் காதர், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தை என அறியப்படுகிறார். இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர். பிரிவினைக்கு முன் இந்திய அணியில் இருந்த இவர், ஒரு சிறந்த பேட்டரும் கூட. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய இவர் 1952ல் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

பாகிஸ்தான் அணிக்காக அப்துல் காதர் விளையாடிய முதல் போட்டி இந்தியாவுக்கு எதிராக இருந்தது. அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இரு வீரர்களும் இதில் விளையாடினர்.

இவர் பாகிஸ்தானுக்காக 23 போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய எல்லா அணிகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானை வெற்றிவாகை சூடவைத்தார்.

1996ல் உலகக்கோப்பை போட்டி ஒன்றினை பார்த்துக் கொண்டிருக்கும்போது இவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் செல்லப்பிள்ளை சச்சின் டெண்டுல்கரும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருக்கிறார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?