இந்தியா: ஹாட் ட்ரிக் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் ரோஹித்தின் பழைய ட்வீட் twitter
ஸ்போர்ட்ஸ்

இந்தியா: ஹாட் ட்ரிக் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் ரோஹித்தின் பழைய ட்வீட்

Keerthanaa R

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆன நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் பழைய ட்வீட்டை தேடி எடுத்து ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்

மூன்று ஒரு நாள் போட்டிகள், மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு நாள் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது.

மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். மூன்று போட்டிகளில் தொடர்ந்து ஒரு இந்திய வீரர், முதல் பந்திலேயே அவுட் ஆவது இதுவே முதன் முறை.

இதனால் சூர்யகுமார் யாதவை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர். கிட்ட தட்ட 30 வயதில் சர்வதேச அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ், டி20, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் என அனைத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மற்ற வீரர்களைப் போல காலம் வரும் வரை காத்திருக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை என்பதை மனதில் வைத்து, களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும், அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்தது இவரது பங்களிப்பு.

தொடக்க வீரர்கள் அணியில் சொதப்பினாலும், சூர்யகுமார் யாதவ், சமீப காலத்தில் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்தார். இந்நிலையில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இவர் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தது அணியின் வெற்றி சதவிகிதத்தை பெரிதாகவே பாதித்தது எனலாம்.

இந்நிலையில் தான், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாமல் இருந்தபோது அவர் பதிவிட்ட ட்வீட் அது.

“சூரியன் மீண்டும் நாளை உதிக்கும்” என அவர் பதிவிட்டிருந்தார். இதனை தேடி எடுத்து, சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவின் தலைமையில் பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையடி வருவது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?