IPL 2023: குருனால் சுழலில் சிக்கிய ஹைதராபாத்; முதலிடத்துக்கு முன்னேறிய லக்னோ Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2023: குருனால் சுழலில் சிக்கிய ஹைதராபாத்; முதலிடத்துக்கு முன்னேறிய லக்னோ

Keerthanaa R

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது லக்னோ.

குருனால் பாண்டியாவின் ஆல் ரவுண்ட் பெர்பாமன்ஸில் ஆட்டம்கண்ட ஹைதராபாத் அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

16வது ஐபிஎல் பருவத்தின் 10வது போட்டியில், நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் ஏய்டன் மார்க்ரம், பேட்டிங் தேர்வு செய்தார்.

இது மார்க்ரமுக்கு கேப்டனாக முதல் போட்டியாகும். குருனால் பாண்டியா மற்றும் அமித் மிஸ்ராவின் சுழலில் விழுந்த ஹைதராபாத் வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 121 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக ராகுல் திருபாதி 35 ரன்கள் எடுத்திருந்தார்

122 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும், மீண்டும் குருனால் பாண்டியா வலையில் சிக்கியது எதிரணி. இம்முறை தனது பேட்டிங்கில் ஹைதராபாத் பவுலர்களை பந்தாடினர்.

16 ஓவர்களில் 127 ரன்களை எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லக்னோ. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது எல் எஸ் ஜி. குஜராத் அணியும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் லக்னோ முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் டெல்லி அணிகளும், இரவு 7.30க்கு நடைபெறும் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?