Andrew Symonds Twitter
ஸ்போர்ட்ஸ்

Andrew Symonds: கார் விபத்தில் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்டஸ் - யார் இவர்?

Antony Ajay R

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்டஸ் நேற்று ஒரு கார் விபத்தில் இறந்திருக்கிறார். முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்தவர் ஆண்ட்ரூ சைமண்டஸ்.

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில் கார் விபத்து நடந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே ஆண்ட்ரூ மறைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆண்ட்ரூ சைமண்டஸ் 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆல்ரவுண்டராக பெயர்பெற்ற இவர் 2012ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்காக, 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 2005ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் அடித்து அசத்தியிருப்பார் சைமண்டஸ். பௌலிங் மற்றும் ஃபீல்டிங்கிலுமே எதிரணிகளுக்கு டேஞ்சரஸ் பிளேயராக அறியப்பட்டவர் சைமண்டஸ்.

கடந்த 2007-2008ம் ஆண்டு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என விமர்சித்ததாக சைமண்டஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சைமண்டஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதக ஹர்பஜன் சிங் ட்விட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரான மைக்கெல் க்ளார்க் எழுதிய ஆஷஸ் டைரி 15 என்ற புத்தகத்தில், “அணிக்கு பெரியதாக எதுவும் சாதிக்காமல், சைமன்ட்ஸ் குடித்து விட்டு கும்மாளம் போட்டவர். இப்படித் தரம் தாழ்ந்த ஒருவர் மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர்” என சைமண்டஸ் குறித்து விமர்சித்திருப்பார்.

இந்த விமர்சனத்துக்கு ஒரு முறைப் பதில் கொடுத்த சைமண்டஸ், “நான் ஐபிஎல்-ல் அதிக பணம் சம்பாதித்தது க்ளார்கை பொறாமை அடையச் செய்தது. பணம் விசித்திரமான செயல்களைச் செய்யக் கூடியது. அது எங்கள் உறவில் விஷத்தைப் பாய்ச்சி விட்டது” எனப் பேசியிருப்பார்.

சைமண்டஸ்ஸின் அதிரடியான பேட்டிங்கை மிஸ் செய்து வந்த அவரது ரசிகர்கள் தற்போது அவரை முழுமையாக மிஸ் செய்கின்றனர். மொத்த கிரிக்கெட் உலகுடன் மைக்கெல் க்ளார்க்கும் வேதனை அடைந்துள்ளார். அவர் சைமண்டஸ்ஸுடன் விளையாடிய ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?