தோனி, சச்சின் ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

MS Dhoni: தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பித்த தோனி, சச்சின்?ஷாக்கான BCCI

முன்னாள் இந்திய அணி வீரர்கள் எம் எஸ் தோனி, சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் விண்ணப்பங்களும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Keerthanaa R

பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு முன்னாள் இந்திய அணி வீரர்கள் எம் எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் விண்ணப்பங்கள் வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஆண்டில் 7 கேப்டன்கள்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையில் படுதோல்வியுடன் வெளியேறியது.

2019 உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. தவிர, ஒரே ஆண்டில் 7 கேப்டன்கள் வரை மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு தொடர்களில் விளையாடியது இந்திய அணி.

இந்த மாற்றங்கள் எதுவும் இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டவில்லை.

தேர்வுக்குழு அதிரடி நீக்கம்:

இதனால் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை அதிரடியாக நீக்கியது பிசிசிஐ.

மேலும், இந்திய அணியை ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் வழிநடத்த புதிய கேப்டனை நியமிக்கும் முனைப்பிலும் இருக்கிறது இந்தியக் கிரிக்கெட் வாரியம்.

இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் பொறுப்புக்கு அடுத்தது யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

5 பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவை தேர்ந்தெடுக்க அஷோக் மல்ஹோத்ரா, ஜதின் பரன்சாப்பே மற்றும் சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது பிசிசிஐ.

தேர்வுக்குழு பொறுப்புகான விண்ணப்பங்கள் பிசிசிஐக்கு வந்தன.

Dhoni

எம் எஸ் தோனி, சச்சின் பெயர்களில் விண்ணப்பங்கள்

அவற்றில் முன்னாள் இந்திய அணி வீரர்கள் எம் எஸ் தோனி, சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் விண்ணப்பங்களும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுடன் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் விண்ணப்பமும் இருந்துள்ளது.

இதனை பார்த்ததும் குழப்பத்தில் ஆழ்ந்த பிசிசிஐ நிர்வாகிகள் விசாரித்ததில், அவை போலி விண்ணப்பங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து விண்ணப்பங்களை நிராகரித்து போலீசாரிடம் புகார் அளிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்வுக்குழுவில் இடம்பெற என்ன தகுதிகள் வேண்டும்?

விண்ணப்பிக்கும் நபர் 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்திய அணிக்காக குறைந்தது 7 டெஸ்ட் மேட்சுகள் அல்லது 30 உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கவேண்டும். அல்லது, குறைந்தது 10 ஒரு நாள் போடிகளிலும் 20 உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியிருக்கவேண்டும்.

மேலும் அந்த விண்ணப்பதாரர் குறைந்தது 5 வருடங்களுக்கு முன்னரே ஓய்வு பெற்றிருக்கவேண்டும்.

கடந்த நவம்பர் 28 ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ தலைவர் ராஜர் பின்னி தலைமையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது தான் போலி விண்ணப்பங்கள் இருந்தது, கண்டறியப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?