Ambati Rayudu: ”இனி u turn கிடையாது” ஓய்வை அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Ambati Rayudu: ”இனி u turn கிடையாது” ஓய்வை அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்

Keerthanaa R

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று அவர் இந்த அறிவிப்பை சொல்லியிருந்தார்.

ஐபிஎல் 2023ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபத்தில் நடைபெறவிருந்தது. மழைக் குறுக்கிட்டதால், போட்டி ரிசர்வ் டே ஆன இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியுடன் தான் ஓய்வு பெறவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். இதனை நேற்றைய போட்டிக்கு முன்னதாகவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

அம்பத்தி ராயுடு கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினார். அதன் பிறகு, அவருக்கு அணியில் விளையாட அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்தது.

2015ஆம் ஆண்டின் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். அதன் பிறகு 2019 உலகக்கோப்பையில் இவர் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் வராதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ராயுடு. இந்திய அணியின் தேர்வாளர்கள் குழுவுக்கு எதிராக இவர் பேசியிருந்ததும் சர்ச்சையானது.

இவருக்கு ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு தருவதாக அந்நாட்டு கிரிக்கெட் ஆணையம் அழைப்பும் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த அணிக்கு அவர் விளையாடவில்லை. இந்நிலையில், தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார் ராயுடு.

ஐபிஎல்லில் ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதில் 5 முறை கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றும் இருக்கிறார்.

தன் ட்வீட்டில், “2 சிறந்த அணிகள், எம் ஐ மற்றும் சிஎஸ்கே, 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆஃப், 8 இறுதிப்போட்டிகள், 5 கோப்பைகள், இன்று 6வது இறுதிப்போட்டி. இது ஒரு நல்ல பயணமாக இருந்தது. இன்றைய இறுதிப்போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி போட்டியாக இருக்கட்டும் என முடிவுசெய்துள்ளேன். இந்த சிறந்த போட்டியில் விளையாடிய நாட்களை நினைத்து நான் மனதார மகிழ்ந்தேன். எல்லோருக்கும் நன்றி. இனி யூ டர்ன் இல்லை" என்று பதிவிட்டிருந்தார்.

நேற்று மழையினால் போட்டி தடைப்பட்ட நிலையில், இன்று ஐபிஎல் 2023ன் ஃபைனல் நடைபெறவுள்ளது. இன்றும் மழை வந்தால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?