செஸ் ஒலிப்பியாட் 2022 தொடக்க நிகழ்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2000 வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கு கொள்கின்றனர்.
பிரதமர் மோடி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த வீரர்களை வாழ்த்தினார். இந்த நாள் இந்தியாவுக்கு பெருமைத் தரக்கூடிய நாள் எனக் கூறிய ஸ்டாலின் தனது உரையில் பிரதமர் மோடியைக் குறித்துப் பேசினார்.
"நான் பிரதமரை நேரில் சென்று அழைக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், கொரோனா காரணமாக செல்ல முடியவில்லை. இதனை அவரிடம் தெரிவித்த போது "நீங்கள் ஓய்வெடுங்கள் நான் நிச்சயம் வருகிறேன்" என அவர் கூறினார். பிரதமர் மோடிக்கு செஸ் விளையாட்டு மிகவும் பிடித்தது என்பதை நாம் அறிவோம்" என்று ஸ்டாலின் பேசினார்.
மேலும் சென்னையில் நடைபெற்ற ஏற்பாடுகளை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், "பொதுவாக பன்னாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு 18 மாதங்கள் ஆகும். நான்கே மாதத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது. இந்த சாதனைக்கு துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டு" என்று கூறினார்.
தமிழ் நாட்டுக்கும் செஸ் விளையாட்டுக்கும் இருக்கும் தொடர்பு குறித்துப் பேசிய ஸ்டாலின், "கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது. இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சதுரங்கம் தமிழகத்தில் ஆனைக்குப்பு என்று அழைக்கப்படட்து. சதுரங்கப்பட்டனம் என்ற ஊர் தமிழகத்தில் இருக்கிறது. இந்த போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு பெறுமைத் தரக் கூடியது. செஸ் அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அறிவை நம்பிய விளையாட்டு." எனமுதல்வர் தெரிவித்தார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust