சேட்டன் சர்மா, விராட் கோலி, கங்குலி Twitter
ஸ்போர்ட்ஸ்

விராட் கோலி vs BCCI சர்ச்சை; உடற்தகுதியை நிரூபிக்க ஊசியா? - சேட்டன் சர்மா கூறியது என்ன?

கேப்டன்சி விஷயத்தில், கங்குலி ரோஹித்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதேநேரத்தில் கோலியையும் கங்குலிக்குப் பெரிதாகப் பிடிக்காது.

Antony Ajay R

ஜீ நியூஸ் ஊடகம் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பாக நடத்திய புலனாய்வு செய்தி சேகரிப்பில் (ஸ்டிங் ஆப்பரேஷன்) பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கும் இடையிலான பிரச்னை என்ன என்பது இந்த ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் இந்திய வீரர்கள் சில தங்களது உடற்தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்து ஊசிகள் எடுத்துக்கொள்வதாகவும் ஜீ ஊடகத்தின் உளவு கேமராவில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா கூறியுள்ளார்.

விராட் கோலி Vs ரோஹித் சர்மா

"கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே பெரிய போரெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம் இருந்தது உண்மைதான். மேலும் கேப்டன்சி விஷயத்தில், கங்குலி ரோஹித்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அதேநேரத்தில் கோலியையும் கங்குலிக்குப் பெரிதாகப் பிடிக்காது.

இந்திய அணியில் இரண்டு கோஸ்டிகள் உள்ளது ஒன்று விராட் கோலி தலைமையிலும் மற்றொன்று ரோஹித் தலைமையிலும் செயல்படுகிறது"

விராட் கோலி Vs கங்குலி

அணிக் கூட்டம் ஒன்றில் விராட் கோலி சொன்ன விஷயத்துக்கு எதிராக கமென்ட் அடித்தார் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி. அப்போது முதல் இருவருக்குமே தீர்க்க முடியாத பிரச்னை எழுந்துவிட்டது. 

கோலி தனது கேப்டன்சி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என நினைக்கிறார். ஆனால் கோலியின் கேப்டன்சி விலகல் முடிவு பற்றிய கூட்டத்தில் இதனை திரும்ப சரிபார்க்க வேண்டும் என்று கங்குலி ஒருமுறை கூறினார். அதை கோலி கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

கேப்டன்சி விலகல் முடிவை கங்குலி மறுபரிசீலனை செய்யச் சொல்லவில்லை என கோலி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அப்போது கோலி பொய் சொல்வதாக கங்குலி கூறினார். ஆனால் கோலி ஏன் அப்படிச் சொன்னார் என்பதைப் பிரிந்துகொள்ள முடியவில்லை"

வருங்காலத்தில் யாருக்கு ஆபத்து?

"இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். டி20 அணியில் இனி ரோஹித் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக ஆவார்.

இஷன் கிஷானின் பங்களா தேஷுக்கு எதிரான இரட்டை சதம் மற்றும் சுப்மன் கில்லின் வெள்ளை பந்து ஃபார்ம் கே.எல்.ராகுல், சிக்கர் தவான் மற்றும் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளியிருக்கிறது." எனப் பேசியிருக்கிறார் சேட்டன் சர்மா.

ஊக்க மருந்து விவகாரம்?

"ஜஸ்பிரித் பும்ராவால் தன் முதுகை வளைக்கக்கூட முடியவில்லை. ஆனால் டி20 அணியில் இடம் பெற ஊசி எடுத்துக்கொண்டு உடற்தகுதியை நிரூபித்தார். அவரைப் போன்றே காயமடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முழுமையான உடற்தகுதியை எட்டாத வீரர்கள் இப்படியாக ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு 80% உடற்தகுதியோடு கூட ஆடியிருக்கின்றனர்." எனவும் சேட்டன் சர்மா கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

ஜீ செய்திகள் மூலம் வெளியான தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ட்விட்டரில் சேட்டன் சர்மா, கங்குலி, விராட் கோலி போன்ற பெயர்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

பிசிசிஐ தரப்பில் இருந்தும் மற்ற வீரர்கள் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த விலக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஸ்டிங் ஆப்பரேஷனால் சேட்டன் சர்மா மீது பிசிசிஐ கோபமடைந்துள்ளது. அவரை தேர்வாளர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டு வருவதாகவும் ஜீ செய்திகள் கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?