IPL தொடரில் பங்கேற்கப்போகும் அணிகள் யாரையெல்லாம் விடுகின்றன, யாரையெல்லாம் தக்கவைக்கின்றன என அறிவித்துவிட்டன. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தம். ஏனென்றால் தல தோனி அணியில் பங்கேற்பது உறுதியாகியிருக்கிறது.
42 வயது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஐபிஎல்லின் முதல் சீசன் தொடங்கி இன்றுவரை விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனி ஐபிஎல் விளையாடுவது பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.
தோனி உடற்தகுதியுடன் இருக்கிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு 37 வயதில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்க வீரர் தோனி தொடர்ந்து விளையாடுவது குறித்து தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.
"கடந்த சீசனே தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என அதிகமாக பேசப்பட்டது. சென்னை அணியின் தக்கவைப்பு பட்டியலில் அவர் பெயரைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
அவர் 2024 ஐபிஎல்லில் பங்கேற்கிறார். அவர் எப்போதுமே ஆச்சரியமளிக்கக் கூடியவர். இன்னும் 3 சீசன்கள் கூட அவர் விளையாடலாம். யாருக்குத் தெரியும்? இப்போது அவர் விளையாடுவது மகிழ்ச்சியானது. " எனப் பேசியுள்ளார் டி வில்லியர்ஸ்.
2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி, அணி தடை செய்யப்பட்டிருந்த 2 ஆண்டுகள் மட்டுமே புனே அணிக்காக விளையாடினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust
2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி கடந்த சீசனில் சில போட்டிகள் ஜடேஜாவின் கேப்டன்சியின் கீழ் விளையாடினார். ஆனால் ஜடேஜா அணிக்காக எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்றுத்தராததால் தோனியே மீண்டும் கேப்டனாக செயல்பட்டார்.
CSK அணி வீரர்களை விடுவிப்பதிலும் தக்கவைப்பதிலும் சிற்பபாக செயல்பட்டுள்ளது என டிவில்லியர்ஸ் புகழ்ந்ததோடு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷாருக் கான் வருகையையும் புகழ்ந்து பேசினார்.