IPL2023: "லக்னோ அணிக்கு விளையாட விரும்பினேன்" மனம் திறந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

IPL2023: "LSG அணிக்கு விளையாட விரும்பினேன்" மனம் திறந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா!

Keerthanaa R

2022 ஐபிஎல்ல் புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, லக்னோ அணியில் விளையாட தனக்கு வாய்ப்பு வந்ததாக தெரிவித்திருக்கிறார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா. தனது நண்பனான கே எல் ராகுலுடன் விளையாட விரும்பியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர்களில் புதிய அணிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு இரு புதிய அணிகள் அறிமுகமாயின. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

லக்னோ அணியின் தலைமை பொறுப்பில் இந்திய வீரர் கே எல் ராகுலும், குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் இருக்கின்றனர்.

இரு அணிகளும் அறிமுக சீசனிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய இரு அணிகளில் லக்னோ 4வது இடத்தை பிடித்தது. குஜராத் அணி இறுதி வரை சென்று அறிமுக சீசனில் கோப்பையை வென்றது.

இந்நிலையில், டைட்டன்ஸ் என்ற பாட்காஸ்ட்டில் பேசிய குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா, கடந்த ஆண்டு அணிகள் தொடங்கப்பட்டபோது தனக்கு லக்னோ அணி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறியுள்ளார்.

"எனக்கு லக்னோ நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. கே எல் ராகுல் அந்த அணியில் விளையாடுகிறார் என அறிந்தேன். அப்போது நான் இருந்த நிலையில், என்னை தெரிந்தவர்களுடன் நான் விளையாடுவது முக்கியம் என நான் கருதினேன்"

மேலும் தன்னை பற்றி அறிந்தவர்கள் தன்னை வேறு ஒரு கோணத்தில் பார்த்தனர் எனவும் அது தனக்கு பக்கபலமாக இருக்கும் என்பதால், லக்னோ அணியில் விளையாட தயாராக இருந்ததாகவும் பாண்டியா தெரிவித்தார்.

எனினும், மறுபக்கம், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹர தன்னை தொடர்புகொண்டு பேசியதால் மனம் மாறியுள்ளார் பாண்டியா.

"அப்போது குஜராத் அணிக்கு ஐபிஎல்லில் விளையாட அனுமதி கூட கிடைத்திருக்கவில்லை. ஆனால் நெஹரா என்னிடம் பேசினார். அவர் அணியின் பயிற்சியாளர் எனவும், இன்னும் உறுதியாகவில்லை எனக் கூறினார்" என தெரிவித்தார் பாண்டியா.

அந்த சமயத்தில் ஓய்வில் இருந்தபடியால், கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்."

ஆஷிஷ் நெஹராவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்த சில நிமிடங்களில், "நீ தயார் என்றால், அணியின் கேப்டனாக நீ பொருப்பேற்கவேண்டும் என நான் விரும்புகிறேன்" என நெஹரா தெரிவித்ததையும் பாண்டியா பகிர்ந்துகொண்டார்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி கடந்த ஆண்டு கோப்பையை வென்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?