”விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம்” சச்சின் மகனுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அட்வைஸ்! Twitter
ஸ்போர்ட்ஸ்

அர்ஜுன் டெண்டுலுக்கர்: "விமர்சனங்களை அப்பா வழியில் கையாளுங்கள்"- சீனியர் வீரர் அட்வைஸ்!

Keerthanaa R

நேற்று குஜராத் அணிக்கு எதிராக முதன் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், மோஹித் சர்மாவின் பந்தில் சிக்சர் ஒன்றை விளாசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை அணி மோசமான தோல்வியை பெற்றிருந்தாலும், அர்ஜுன் டெண்டுல்கர் களத்தில் காண்பித்த திறன், அவரை பேசுபொருளாக்கியிருக்கிறது.

ஐபிஎல் 2023ன் நேற்றின் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி. டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது மும்பை.

களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாகாவை தன் முதல் பந்திலேயே வெளியேற்றினார் அர்ஜுன் டெண்டுல்கர். இது அவருடைய மூன்றாவது விக்கெட்.

அவர் வீசிய 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே வழங்கியிருந்தார். தொடர்ந்து பேட்டிங்கிற்காக களமிறங்கிய போது, அதிரடியாக விளையாடினார் அர்ஜுன். 9 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் அர்ஜுன். பௌலிங் ஆல் ரௌண்டராக அணிக்குள் கால் பதித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு பேட்டிங் ஆட கிடைத்த முதல் வாய்ப்பு இது.

அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திகொள்ள எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியதில் இவரது திறன் என்ன என்பதை கணிக்க முடிகிறது எனக் கூறுகிறது கிரிக்கெட் வட்டாரம்.

208 ரன்கள் டார்கெட்டை நோக்கி களமிறங்கிய ரோஹித் சர்மாவின் பால்தான்ஸ் படை அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

நெஹல் வதேரா, சூர்யகுமார் யாதவ், கெமரூன் க்ரீன் ஆகியோர் தலா 40, 23, 33 ரன்கள் எடுத்திருந்தனர். 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை அணி.

இதனை தொடர்ந்து 5 முறை சாம்பியன்களான மும்பை அணி மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியது. குறிப்பாக அர்ஜுன் டெண்டுல்கர் மீது.

ஹைதராபாத் அணிக்கு எதிராக தன் முதல் விக்கெட்டை அவர் எடுத்தபோது, அது மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் வழங்கிய 48 ரன்கள், அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனால் அவரது திறன் மீது விமர்சனங்கள் எழுந்தன.

அர்ஜுன் டெண்டுல்கரின் பௌலிங்கில் வேகம் போதவில்லை எனவும், அவரது பௌலிங் அலைன்மெண்ட் சீராக இல்லை எனவும் கூறியிருந்தார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லாதிஃப்.

“தனது கரியரின் தொடக்கத்தில் இருக்கிறார். அவர் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும். அவரை வழிநடத்த ஒரு பயோமெக்கானிக்கல் எக்ஸ்பர்ட் வேண்டும்” எனக் கூறினார் ரஷீத்.

இதனை தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

“நீங்கள் என்ன செய்தாலும் உங்களை விமர்சித்துக்கொண்டு தான் இருப்பார்கள். சந்தீப் சர்மா 120 kmph ல் பந்து வீசி வருகிறார். அவரை விட அர்ஜுனின் வேகம் அதிகமாக தான் இருக்கிறது.”

”இப்போது தான் அர்ஜுனுக்கு 23 வயதாகிறது. அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள தன் வாழ்நாள் முழுவதும் உள்ளது. விமர்சனங்களுக்கு செவி சாய்க்கவேண்டாம் என்பதே எனது அறிவுறையாகும்.

எப்படி அர்ஜுனின் தந்தை சச்சின் தன்னை தானே ஊக்கப்படுத்திக்கொண்டாரோ, அதனி அர்ஜுனும் செய்யவேண்டும். அவரிடம் அபார திறன் உள்ளது.

முறையாக பயிற்சி மேற்கொண்டு, அணியில் விளையாட அவருக்கு பழகிய பின்னர், 140kmph ல் கூட அவர் பந்துவீசலாம். அவருக்கு பெரிய கூட்டத்தையும், அனுபவம் வாய்ந்த வீரர்களையும் எதிர்கொள்ளும்போது தயக்கமில்லாமல் விளையாடினால், இது நடக்கும்.

அவரது பந்து வீச்சு வேகத்தில் நான் எந்த பிரச்னயும் பார்க்கவில்லை. சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களில் பலர், களத்தில் ஒரு முறை கூட இறங்கியிருக்கமாட்டார்கள். இதனால் விமர்சனங்களை தனது தந்தையைப் போல புறம்தள்ளிவிட்டு, தன் திறனை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.” என்று பேசியுள்ளார் பிரெட் லீ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?