Ishan Kishan Twitter
ஸ்போர்ட்ஸ்

Ishan Kishan 200: அதிவேக இரட்டை சதம் - வங்கதேசத்துக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய இஷான்!

Keerthanaa R

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்.

மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது வங்கதேசம்

இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவிற்கு தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் மூன்று ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த கோலி இஷானுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

பொறுமையாக விளையாடிய இஷான், 49 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் பின்னர் இவரும் அடித்து ஆட தொடங்கினார்.

சிக்ஸர், ஃபோர் என பவுண்டரிக்கு பந்துகளை பறக்கவிட்டு, தனது முதல் ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். சதமடித்த பிறகு இவரை கட்டுப்படுத்தும் வழிகளின்றி தவித்தது வங்கதேசம். 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் இஷான்.

இது அவரது முதல் ஒரு நாள் இரட்டை சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 7வது வீரரானார் இஷான். இரட்டை சதமடித்த 4வது இந்திய பேட்டர் என்ற பெருமையும் இவரை வந்தடைந்தது.

மேலும் அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் புரிந்திருக்கிறார் இஷான் கிஷன். அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் (138 பந்துகள்), இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக் (140 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.

131 பந்துகளை சந்தித்து, 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 24 ஃபோர்கள் மற்றும் 10 சிக்ஸர்களை அடித்திருந்தார் இஷான். இவருக்கு பாராட்டு மழை பொழிந்துவருகிறது கிரிக்கெட் உலகம்.

இந்திய அணி இன்னும் பேட்டிங் செய்து முடிக்கவில்லை. விராட் கோலியும் தனது 72வது சதத்தை பூர்த்திசெய்துளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?