சச்சின் பரிசளித்த பேட்டில் சதமடித்த அப்ரிடி; சர்வதேச கிரிக்கெட்டும் சுவாரஸ்யங்களும்|Part 1 Twitter
ஸ்போர்ட்ஸ்

சச்சின் பரிசளித்த பேட்டில் சதமடித்த அப்ரிடி; சர்வதேச கிரிக்கெட்டும் சுவாரஸ்யங்களும்|Part 1

இந்திய மக்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கும் கிரிக்கெட் விளையாட்டு குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

NewsSense Editorial Team

இந்திய ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் ஒன்று இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான். இந்தியாவில் இருந்து கொண்டு கிரிக்கெட் மீது காதல் கொள்ளாமல் இருப்பது எல்லாம் அபூர்வமான விஷயம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் மற்றும் அதனை ஆராதிப்பவர்கள் என்று இரண்டு குழுக்களாகக் கூட பிரிக்கலாம்.

அந்த அளவுக்கு கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் நம்மில் அதிகம். மறுபக்கத்தில், கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே மேட்ச் நடக்கிறது என்றால் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும். இப்படி இந்திய மக்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கும் கிரிக்கெட் விளையாட்டு குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் பேட்டை வைத்து ODI இல் சாதனை படைத்த ஷாகித் அப்ரிடி

நைரோபியில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் (ODI) போட்டியில் பாகிஸ்தான் ஷாகித் அப்ரிடி சரியான பேட் இல்லாமல் கலந்து கொள்ள நேர்ந்தது. இந்த சூழலில், வாகர் யூனிஸ், சச்சின் டெண்டுல்கர் தனக்கு பரிசாக அளித்த பேட் ஒன்றை ஷாகித் அப்ரிடிக்கு வழங்கியுள்ளார். இந்த பேட்டை வைத்து வெறும் 37 பந்துகளில் 11 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்து சாதனை படைத்தார் அப்ரிடி. இந்த சாதனை வருங்காலத்தில் கோரி ஆண்டர்சன் (36 பந்துகள்) மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் (31) ஆகியோரால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய அதிரடி மன்னன் கெய்ல்:

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 137 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் பந்தில் சிக்ஸ் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை கடந்த 2012 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றில் நிகழ்த்தியுள்ளார் கெய்ல்.

டெஸ்ட் போட்டியில் ரசிகையிடம் இருந்து முதல் முத்தம் பெற்ற அப்பாஸ் அலி:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அப்பாஸ் அலி பெய்க் கடந்த 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் அரை சதம் அடித்திருந்தார். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக வடக்கு ஸ்டாண்டில் இருந்து ஓடி வந்த இளம் ரசிகை ஒருவர் அவரது கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

சச்சினை முந்திய நண்பர் வினோத் காம்ப்ளி:

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் குழந்தை பருவ நண்பர் தான் வினோத் காம்ப்ளி. வெறும் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் இரண்டு இரட்டை சதங்கள் அடித்தது உட்பட டெஸ்ட் சராசரி 54.20 வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய 200 டெஸ்ட்களுக்குப் பிறகு 53.78 சராசரி வைத்துள்ளார்.

முதல் பந்தில் 3 முறை விக்கெட் இழந்த சுனில் கவாஸ்கர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான சுனில் கவாஸ்கர் தனது வாழ்நாளில் 34 சதங்கள் உட்பட 10 ஆயிரம் ரன்களை அடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். ஆனால், அவர் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் 3 முறை தனது விக்கெட்டுகளை இழந்தும் இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 5 நாட்களும் விளையாடிய இந்தியர்கள்:

இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ML ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 5 நாட்களும் விளையாடியுள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் சயீப் அலிகானின் தாத்தா இப்திகர் அலிகான் பட்டோடி.

டான் பிரட் மேன் விக்கெட்டை வீழ்த்திய ஒரே பவுலர்:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டான் பிரட் மேனின் விக்கெட்டை வீழ்த்திய ஒரே பவுலர் என்ற பெருமை லாலா அமர்நாத்துக்கு உரியது. இந்த நிகழ்வு கடந்த 1948 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்றது.

பாகிஸ்தான் - இந்தியா போட்டியின் ஸ்வாரசிய நிகழ்வுகள்:

பாகிஸ்தான் - இந்தியாவுக்கு இடையே 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா கப் போட்டி மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் பல ஸ்வாரசியமான மற்றும் விசித்திரமான விஷயங்கள் ஒரே மாதிரியாக நடைபெற்றுள்ளன. இதில், பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் செய்தது, இந்தியா 245 ரன்களை எடுத்தது ஆகியவை அடங்கும்.

உலகக் கோப்பை போட்டிக்கும், லார்ட்ஸ்க்கும் இடையேயான ஒற்றுமை:

இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை வென்ற பிறகு 3 ஆண்டுகள் கழித்து 1986 இல் லார்ட்ஸ் போட்டியை வென்றது. அதே போல, 28 ஆண்டுகள் கழித்து 2011 இல் இந்திய அணி உலகக்கோப்பை போட்டியை வென்ற பிறகு 2014 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியை வென்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?