சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை அணி.
இதன் மூலம் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது சென்னை அணி. அதே சமயம் நேற்றைய வெற்றி மூலம் பாயின்டஸ் டேபிளில் மீண்டும் முதல் நான்கு இடங்களில் என்ட்ரி கொடுத்திருக்கிறது பெங்களூரு.
ஃபாப் டு பிளசிஸ் அதிரடி முதல் தோனியின் சொதப்பல் வரை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் நேற்றைய தினம் டாஸ் வென்றார், சேஸிங்கை தேர்ந்தெடுத்தார், சான்ட்னருக்கு பதிலாக மொயின் அலி விளையாடுவார் என்றார்.
சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். உலகின் இரு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச முகேஷ் சவுதரி மற்றும் சிமர்ஜீத் சிங் என இரு அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை பவர்பிளேவில் பயன்படுத்தினார் தோனி.
பவர்பிளே முழுக்க ஆர்சிபி ராஜ்ஜியம் தான், குறிப்பாக டு பிளசிஸ் வெளுத்து கட்டினார். பவர்பிளே முடிவில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி. அதன்பிறகு இந்த உத்தி, வேலைக்கு ஆகாது என தனது அதர பழைய உத்தியான இரு முனை ஸ்பின்னர் தாக்குதலை நிகழ்த்தினார் சென்னை கேப்டன் தோனி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
மொயின் அலி வீசிய பந்தில் ஆர்சிபி கேப்டன் டு பிளாசிஸ் அவுட் ஆனார். அவர் 22 பந்துகளில் நான்கு பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஜடேஜா வீசிய அடுத்த ஓவரிலேயே கோலி - மேக்ஸ்வெல் இடையே குழப்பம் ஏற்பட மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனார்.
அதற்கடுத்த ஓவரை மீண்டும் மொயின் அலி வீசினார். இம்முறை தடவிக் கொண்டிருந்த விராட் கோலியை போல்டாக்கினார். 33 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் மட்டும் அடித்து வெளியேறினார் கோலி.
அடுத்தடுத்து மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் காலியாக 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. மூன்று ஸ்டார் பேட்ஸ்மேன்களும் நடையை கட்டியதால் பெங்களூருவில் ரன்வேகத்தை சென்னை பௌலர்கள் மட்டுப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மஹிபால் லாம்ரர் அதிரடி ஆட்டம் ஆடினார். 18வது ஓவரை வீசிய பிரிட்டோரியஸ் பந்தை பிரித்து மேய்ந்து 18 ரன்கள் எடுத்தார். 19வது ஓவரை தீக்ஷண சிறப்பாக பந்து வீசி வெறும் இரண்டு ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆனால், தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரை விளாசினார்.
பிரிட்டோரியஸ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுத்தது பெங்களூரு, விளைவு - 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் எடுத்தது.
சென்னை சேஸிங்கில் களமிறங்கியது. கிட்டத்தட்ட பெங்களூரு ஆட்டத்தை போலவே சென்னை ஆட்டமும் தொடங்கியது.
பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து அசத்தியது ருதுராஜ் கான்வாய் ஜோடி. பவர்பிளே முடிந்தவுடன் ருதுராஜ் அவுட் ஆனார். அதற்கடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல் பந்தில் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் உத்தப்பா வெளியேறினார்.
மேக்ஸ்வெல் வீசிய பத்தாவது ஓவரில் ராயுடு போல்டானார்.கிட்டத்தட்ட தோனி பயன்படுத்திய அதே உத்தியைத் தான் டுபிளசிஸ் பயன்படுத்தினார். சென்னைக்கு மொயின் அலி, ஆர்சிபிக்கு மேக்ஸ்வெல்.
10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது சென்னை. அதன்பின்னர் கான்வாய், ஜடேஜா அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆயினர்.
17வது ஓவரில் தோனி களமிறங்கினார். அந்த ஓவரை ஹேசில்வுட் சிறப்பாக பந்து வீசி ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மொயின் அலி விக்கெட்டை காலி செய்தார்.
அதைத்தொடந்து வீசிய ஹேசில்வுட் ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். அவர் மூன்று பந்துகளை சந்தித்து இரண்டு ரன்கள் மட்டும் எடுத்தார், அத்தோடு சென்னை கனவு தகர்ந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட 17 ரன்கள் எடுத்தது சென்னை. இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu