KKR vs GT: "என்னால் முடியும் என்று நம்பினேன்" கொல்கத்தாவின் ஹீரோ Rinku Singh பேசியது என்ன? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

KKR vs GT: "என்னால் முடியும் என்று நம்பினேன்" கொல்கத்தாவின் ஹீரோ Rinku Singh பேசியது என்ன?

17வது ஓவரில் ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் என நம்பிக்கைக் குரிய பேட்ஸ்மேன்களை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் குஜராத் கேப்டன் ரஷித் கான். ஆனால் போட்டியை ரின்கு சிங்கின் அசாத்திய பேட்டிங் மாற்றியது - வீடியோ உள்ளே...

Antony Ajay R

கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் நடந்த நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் ஹீரோவானார் ரின்கு சிங்.

நேற்றைய போட்டியில் குஜராத் அணி வைத்த 205 டார்கெட்டை நோக்கி களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அணியின் ஓபனர்களான ரஹ்முல்லா குர்பாஸ், நாராயன் ஜகதீசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 40 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.

வெங்கடேஷ் ஐயருக்கு துணையாக கேப்டன் நிதீஷ் ரானாவும் ரன்களை சேர்த்தார். ஆனால் குஜராத் அணியின் ஆஸ்தான பவுலராக மாறிவரும் ஜோசப் 14 மற்றும் 16வது ஓவரில் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.

17வது ஓவரில் ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் என நம்பிக்கைக் குரிய பேட்ஸ்மேன்களை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் கேப்டன் ரஷித் கான்.

இத்துடன் போட்டி முழுவதுமாக குஜராத் பக்கம் திரும்பியது. 18 பந்துகளுக்கு 50 ரன்கள் தேவை என்ற நிலையில் ரின்கு சிங் மற்றும் உமேஷ் யாதவ் களத்தில் இருந்தனர்.

இருவரும் விக்கெட் இழக்காமல் இருக்க, கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் முதல் பந்தில் சிங்கிள் கொடுக்க பேட்டிங் செய்ய களமிறங்கினார் ரின்கு சிங்.

அவருக்கு கிடைத்த 5 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். மைதானத்தின் அனைத்துப் பக்கமும் பந்துகள் சிதறின.

போட்டியை வென்றதும் கேப்டன் நிதீஸ் ரானாவும் ரின்கு சிங்கும் கட்டியணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தனர்.

வெல்லவே முடியாத போட்டியை வெற்றிபெறச் செய்து உணர்ச்சிகடலில் ரசிகர்களை மூழ்கடித்தார் ரின்கு.

"என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ராணா அண்ணா கடைசி வரை விளையாடு என்ன நடக்கிறது எனப் பார்ப்போம் என்று கூறினார்" என தனது சாதனைக் குறித்துப் பேசினார் ரின்கு சிங்.

அடுத்தடுத்து சிக்ஸ் அடிக்க வேண்டிய அழுத்தம் குறித்து பேசும் போது, "நான் அடுத்தடுத்து சிக்ஸ் அடிக்க நினைத்தேன் உமேஷ் அண்ணா என்னிடம் அதிகமாக யோசிக்காதே பாலை மட்டும் கவனத்தில்கொள் என்றார். நான் பாலுக்கு மட்டுமே ரியாட் செய்தேன்" எனக் கூறினார்.

கொல்கத்தாவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு வீரரான வெங்கடேஷ் ஐயர், "இந்த போட்டி லார்ட் ரிங்கு சிங்குக்காக எப்போதுமே நினைவு கூறப்படும்" எனக் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் தனக்கென தனி பக்கத்தை உருவாக்கியுள்ளார் ரின்கு சிங்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?