IPL : ஒரு பந்தின் மதிப்பு 49 லட்சமா? - நீங்கள் அறிந்திடாத 7 உண்மைகள்! Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL : ஒரு பந்தின் மதிப்பு 49 லட்சமா? - நீங்கள் அறிந்திடாத 7 உண்மைகள்!

பல சுவாரஸ்யமான நிகழ்வுகளால் தான் ஐபிஎல் மற்ற போட்டிகளை விட மக்களை அதிகமாக கவருகின்றனது. ஐபிஎல் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திடாத பல விஷயங்கள் இருக்கின்றன.

Antony Ajay R

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற சில போட்டிகளிலேயே பல சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

பல திருப்பங்கள், பல நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. பல விசித்திரமான, அதிசயமான சம்பவங்களைப் பார்க்கிறோம்.

கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றிபெறச் செய்தார். கடைசி பந்தில் இரண்டு சொதப்பல்களால் தோல்வி அடைகிறது ஆர்.சி.பி அணி.

99 ரன்களில் அவுட் ஆகிறார் தவான், தோனி கேட்கும் ஒவ்வொரு டிஆர்எஸ் ரிவியூவும் பலிக்கிறது.

இப்படியான சுவாரஸ்யமான நிகழ்வுகளால் தான் ஐபிஎல் மற்ற போட்டிகளை விட மக்களை அதிகமாக கவருகின்றனது. ஐபிஎல்-ல் இதுவரை நீங்கள் அறிந்திடாத பல விஷயங்கள் இருக்கின்றன.

MVP பட்டத்தை இரண்டு இந்தியர்கள் தான் பெற்றிருக்கின்றனர்!

ஒவ்வொரு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரருக்கு தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு Most Valuable player எனும் பட்டம் வழங்கப்படும்.

இதுவரை நம் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் மட்டுமே இந்த பட்டத்தைப் பெற்றுள்ளனர்.

2010ம் ஆண்டு இந்த பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுலுக்கர் வாங்கினார். விராட் கோலி 2016ம் ஆண்டு இந்த பட்டத்தைப் பெற்றார். மூன்றாவதாக ஹர்ஷல் படேல் 2021ம் ஆண்டு இந்த பட்டத்தை வாங்கியிருக்கிறார்.

ஒரு பந்தின் மதிப்பு 49ன் லட்சம்

ஜீ நியூஸ் தளம் கூறுவதன் படி, ஐபிஎல் 2023ல் நடத்தப்படும் ஒவ்வொரு போட்டியிலும் ஐசிசி 118 கோடி வரை பணம் ஈட்டுகிறது.

இதனை கணக்கிட்டுப் பார்த்தால் வீசப்படும் ஒவ்வொரு பந்தின் மதிப்பும் 45 லட்சம். (ஒரு பந்தின் விலை 12,000 - 15,000 ரூபாய் தான், kokkabura பந்துகள் உபயோகிக்கப்படுகின்றன).

பியூஷ் சாவ்லாவின் நோபால் ரெகார்ட்

இந்தியாவில் அதிகம் கவனம் பெறாத ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா. மிகவும் சீரான பந்துகளை வீசுவது இவரது ஸ்பெஷாலிடி! இவர் தொடர்ந்து 386 ஓவர்கள் ஒரு நோபால் கூட இல்லாமல் வீசியிருக்கிறார். 2016ம் ஆண்டு தான் தனது ஐபிஎல் கெரியரில் முதல் நோபாலை வீசினார்.

ஒரே அணிக்காக 100 போட்டிகள் விளையடிய வெளிநாட்டு வீரர்கள்!

என்னதான் ஃப்ரான்சசிகளில் இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் தக்கவைக்கப்பட்டாலும் ஒரே அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் அதிககாலம் நீடிப்பது மிகவும் அரிதே!

அந்தவகையில் ஒரே அணிக்காக 100 போட்டிகள் விளையாடிய வீரர்களாக திகழ்வது ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஏ.பி.டிவில்லியர்ஸ், கொல்கத்தா அணிக்காக சுனில் நரேன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா, பொல்லார்ட் மட்டும் தான்.

இவர்களிலும் நரேன் மட்டுமே இன்றும் தொடர்ந்து விளையாடுகிறார்.

விராட் கோலியின் பாட்னர்ஷிப் இரட்டை சதங்கள்!

விராட்கோலி பேட்டிங்கில் களமிறங்கும் போதே எதிரணிக்கு தொடை நடுங்கும். களத்தில் அவருக்கு சரியான இணை அமைந்தால் ரன்கள் சரமாறியாக குவியும்.

அப்படி 3 முறை பாட்னர்ஷிப் இரட்டை சதத்தை பதிவு செய்த வீரர் கோலி தான். முதலாவது, 2012ம் ஆண்டு கிறிஸ் கெயிலுடன் இணைந்து டெல்லி டேர்டவில்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் சேர்த்தனர்.

இரண்டாவது 2015ம் ஆண்டு ஏபிடி - விராட் கூட்டணி இணைந்து 205 ரன்கள் சேர்த்தனர். மூன்றாவது இதே கூட்டணி 2016ல் 229 ரன்கள் சேர்த்தனர்.

ஹர்பஜன் சிங் படைத்த வாத்து சாதனை!

பூஜ்ஜியம் ரன்களில் அவுட் ஆவதை டக் அவுட் என்போம். ஜர்பஜன் சிங் தான் தனது ஐபிஎல் கெரியரில் அதிகம் டக் அவுட் ஆன வீரராவார். இவர் 13 முறை பூஜ்ஜியம் ரன்களில் அவுட் ஆகியிருக்கிறார்.

ஆர்சிபியின் இரட்டை சாதனை

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் மற்றும் குறைவான ரன்கள் என இரண்டு சாதனைகளை படைத்துள்ளது ஆர்சிபி அணி.

2013ம் ஆண்டு கிறிஸ் கெயில் 175 ரன்கள் அடித்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 263 ரன்கள் சேர்த்தது.

2017ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி 132 ரன்களை சேஸ் செய்தது. ஆனால் 10வது ஓவரிலேயே 49 ரன்களுக்கு ஆலவுட் ஆனார். அந்த போட்டியில் கீதர் ஜாதவ் அதிகபட்சமாக 9 ரன்கள் எடுத்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?