கேரளாவைச் சேர்ந்த கால்பந்து வர்ணனையாளர் உக்ரைன் வீரனின் காலில் முத்தமிட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் Ivan Kaliuzhnyi. இவரது சிறப்பான ஆட்டத்தைப் போற்றும் வகையில் கேரளா சார்பாக இதனைச் செய்தார் ஷைஜு தாமோதரன். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக கோவமடைந்தனர். சமுக வலைத்தளங்களில் எதிர்வினைகளை சந்தித்து வருகிறார் ஷைஜு தாமோதரன்.
இந்த சர்ச்சை சம்பவம் ஒரு யூடியூப் சேனலுக்காக எடுக்கப்பட்ட போட்டியின் போது நடைபெற்றது. அதில் உக்ரைன் வீரரை நேர்காணல் செய்தார் ஷைஜு. அப்போது அவர் நவம்பர் 13ம் தேதி கோவா அணிக்கு எதிராக அடித்த கோலுக்காக பாராட்டைத் தெரிவிக்க விரும்பினார். அதற்காக வீரரின் இடதுகாலை எடுத்து தனது மடியில் வைத்து முத்தமிட்டார். அப்போது, "இது எனது முத்தமில்லை. கேரளாவின் முத்தம்" என்றுக் கூறினார்.
அசௌகரியமாக உணர்ந்த வீரர் தனது காலை பின்னுக்கு இழுக்க முயன்ற போது தாமோதரன் இது கேரளாவின் முத்தம் என திரும்பத்திரும்ப கூறுவதனை வீடியோவில் பார்க்கலாம்.
தாமோதரன் தனது நகைச்சுவையான வர்ணணைக்காக பாராட்டப்படுபவர். தற்போது ரசிகர்கள் அவ்ரை கோவத்தில் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
தாமோதரன் யாருடைய கால்களையும் முத்தமிடலாம். ஆனால் அதற்காக மொத்த கேரளாவின் பெயரையும் பயன்படுத்தும் உரிமையை அவருக்கு யார் வழங்கியது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust