ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தை இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. சூப்பர் 4 கட்டத்தில் இது இரண்டாவது தொடர் தோல்வி. முன்னதாக பாகிஸ்தானிடமும் தோல்வியைத் தழுவியிருந்தது இந்தியா.
இப்போது நிலைமை நிச்சயமாக கையை மீறிவிட்டது. அதாவது, இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதும், விலகுவதும் மற்ற அணிகளின் விளையாட்டைப் பொறுத்தே இருக்கிறது. தவிர, இன்னும் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானுடன் சூப்பர் 4ல் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அதில் அதிக வித்தியாசத்துடன் வென்று ரன் ரேட்டை அதிகரிப்பது அவசியம்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் , செப்டம்பர் 7
இந்தியா - ஆப்கானிஸ்தான் , செப்டம்பர் 8
இலங்கை - பாகிஸ்தான், செப்டம்பர் 9
சூப்பர் 4 சுற்றில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்றுள்ள இலங்கை அணி மீதமிருக்கும் ஒரு போட்டியையும் வென்று முதலிடத்தை தக்கவைக்க வேண்டும். அந்த போட்டியில் தாசுன் ஷனாகாவின் அணி அதிக ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் டேபிளில் மோசமான இடத்தை அடையும்.
அதற்குமுன்,
இன்று மோதும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளில் இதுவரை ஒரு போட்டியை கூட வெல்லாத முகமது நபியின் அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். குறைந்த ரன்ரேட்டில் வீழ்த்துவது நல்லது.
மிக முக்கியமாக நாளை நடக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆப்கானிஸ்தானை அதிக ரன்ரேட்டுடன் வீழ்த்த வேண்டும், இறுதியில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளியைப் பெற்றிருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு நிழையும் அணி இந்தியாவகவும் இருக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust