தோனி Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022: "இது தான் இளைஞர்களுக்குத் தேவை" CSK -ன் கடைசி போட்டிக்கு பிறகு தோனி பேச்சு

நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த சீசனின் கடைசிப்போட்டி எனபதனால் மேட்சுக்குப் பிறகு தோனி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமாகாக இருந்தது.

Antony Ajay R

ஐபிஎல் 2022 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்று முடிந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து தோனியிடம் கேட்கப்பட்டதற்கு அவர், “சென்னைக்கு நன்றிசொல்வதற்காக அடுத்த ஆண்டு விளையாடுவேன். ரசிகர்களுக்காக அடுத்த ஆண்டு விளையாடாமல் இருக்கிறது நியாயம் இல்லை.” என்றார்.

கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்த பாராட்டுவிழாவில் தனது கடைசி போட்டி சென்னையில் தான் நடக்கும் என தோனி பேசினார். இதனை காப்பாற்றும் விதமாக நேற்று பேசியிருக்கிறார்.

நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த சீசனின் கடைசிப்போட்டி எனபதனால் மேட்சுக்குப் பிறகு தோனி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமாகாக இருந்தது.

"இளைஞர்களுக்கு இது தான் முக்கியம்"

தோனி பேசியதாவது, “போட்டியின் ஆரம்பத்தில் நாங்கள் அதிக விக்கெட்களை இழந்துவிட்டோம். அதனால் மொயின் அலி மிகவும் நிதானமாக விளையாட வேண்டியிருந்தது. விக்கெட் வீழும் போது பொறுப்புகள் மாறுகின்றன. மற்றொரு விக்கெட் வீழ்ந்தால் நிலைமை இன்னும் மிக மோசமாகியிருக்கும். துவக்கம் மிக முக்கியம். ஒட்டுமொத்தமாக 15 ரன்கள் வரை குறைவாகப் பெற்றிருக்கிறோம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “முக்கியமான விஷயமாக நான் பார்ப்பது முகேஷ் சவுத்ரி ஒவ்வொரு போட்டியிலும் புதிதாகக் கற்றுக்கொள்ள விளைகிறார். ஒவ்வொரு ஆட்டதிலும் அவர் முன்னேற நினைக்கிறார். இது தான் இளைஞர்களுக்குத் தேவை. எங்களது மலிங்காவை (பதிரனா) தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. அவர் சிறப்பாக விளையாடுகிறார். நிச்சயம் அவர் அடுத்த சீசனில் தனது பங்களிப்பை வழங்குவார். ஒரு பேட்டரோ பௌலரோ வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு சீசனுக்கான விளையாட்டு அல்ல. அடுத்த 10 ஆண்டுகளுக்கு விளையாட தயார்ப்படுத்த வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?