RCB vs MI: "இதே உத்வேகத்துடன் விளையாட வேண்டும்"- வெற்றி குறித்து விராட் கோலி பேசியது என்ன? Twitter
ஸ்போர்ட்ஸ்

RCB vs MI: "இதே உத்வேகத்துடன் விளையாட வேண்டும்" வெற்றி குறித்து விராட் கோலி பேசியது என்ன?

Antony Ajay R

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

முன்னாள் கேப்டன் விராட் கோலி 49 பந்துகளுக்கு 82 ரன்கள் விளாசினார். இறுதிப்பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வென்று கொடுத்ததும் அவரே.

கேப்டன் பாஃப் டூப்ளசிஸும் 43 பந்துகளில் 73 ரன்கள் அடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாடும் ஆர்சிபிக்கு இந்த வெற்றி நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.

வெற்றிக்கு பிறகு விராட் கோலி பேசியதாவது, "மும்பை ஐந்து முறையும் சென்னை நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளதைத் தவிர்த்து நாங்கள் தான் அதிகமாக பிளே ஆஃப்க்கு முன்னேறியிருக்கிறோம். நாங்கள் நிலையாக விளையாடுகிறோம்.

இது விளையாட்டின் மேல் கவனத்துடன் இருப்பதைப் பற்றியது, சமச்சீராக இருப்பது.

நாங்கள் இதே உத்வேகத்துடன் விளையாட வேண்டும். சிறப்பானதை செயல்படுத்த வேண்டும்".

போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்.

Virat Kohli had a chat with Tilak Verma and Nehal Wadhera

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்திலேயே தடுமாறத் தொடங்கியது. ஆனால் இளம் வீரரான திலக் வர்மா சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பையின் ஹீரோவானார்.

46 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் அவரது அணி வைத்த 171 டார்கெட் அனுபவம் வாய்ந்த ஆர்சி பேட்ஸ்மேகளுக்கு சொற்பமானதாகவே இருந்தது.

ஆர்சிபியின் இளம் பவுலரான கரண் சர்மாவைப் பாராட்டினார் விராட் கோலி. "அவர் கடந்த ஆண்டும் சிறப்பாக விளையாடினார். முக்கியமான நேரத்தில் இடது கை பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்தினார். இப்போது நெட் பயிற்சியில் கூட அவர் பந்தில் சிக்ஸர் அரிதுதான்" எனப் பேசினார் கோலி.

விராட் கோலி குறித்து பேசிய கேப்டன் பாஃப், "விராட் கோலியுடன் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருந்தது. விராட்டிடம் எனர்ஜி ததும்புகிறது" எனப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?