Rohit Sharma Twitter
ஸ்போர்ட்ஸ்

Rohit Sharma: ஐபிஎல்லில் இருந்து விலகும் அடுத்த இந்திய வீரர்? MI அடுத்த கேப்டன் யார்?

Keerthanaa R

உலகக்கோப்பை தொடர்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாலும், அதிக வேலைப்பளு இருப்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரண்டு சீசன்களுக்கு பிறகு, இந்தியாவில் முழுமையாக ஐபிஎல் தொடர் நடக்கிறது மற்றும், சென்னையில் போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்நிலையில், நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ரோஹித் சர்மா ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் நடக்கவிருக்கிறது. அதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பை, அடுத்ததாக அக்டோபர் மாத வாக்கில் 50 ஓவர் உலகக்கோப்பை என தொடர்ந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.

ரோஹித் சர்மா, இந்திய அணியை ஒரு நாள், டெஸ்ட், டி20 என மூன்றிலும் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

mumbai indians

இதனால் தனது வேலைப்பளுவை குறைத்து ஓய்வெடுத்துக்கொள்ளவும், உலகக்கோப்பை தொடர்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவும், 2023 ஐபிஎல்லின் சில போட்டிகளில் இவர் விளையாடமாட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியறிக்கை தெரிவித்துள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த போட்டிகளில் ரோஹித் விளையாடமாட்டார் என்பதை அவரே தேர்வு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அணியுடன் எல்லாப்போட்டிகளுக்கும் இவர் பயணிப்பார் எனவும், சூர்யகுமார் யாதவுக்கு அறிவுறை வழங்குவார் எனவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த ஆண்டு மோசமாக விளையாடி முதலில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?