Shubhman Gill Twitter
ஸ்போர்ட்ஸ்

Shubhman Gill: இரட்டை சதமடித்த இந்திய வீரர் - படைத்த சாதனைகள் என்ன?

Keerthanaa R

இந்திய அணி வீரர் சுப்மன் கில், ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்று நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியை விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி.

நேற்று ஹைதராபாத்தில் நடைப்பெற்ற முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில், பொறுமையாக விளையாடி, 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்தார். இவர் வெறும் 19 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்திருந்தனர்.

சர்வதேச அளவில், 1000 ரன்களை குறைவான இன்னிங்ஸில் எட்டிய இரண்டாவது வீரர் ஆகிறார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணி வீரர் ஃபக்ர் சமான் உள்ளார்.

இவர் 18 போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். இரண்டாவது இடத்தை மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் உடன் பகிர்கிறார் கில், இவர்கள் இருவருமே தலா 19 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சுப்மன் கில் சாதனைகள்:

  • அதிவேக 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர்

  • சர்வதேச அளவில், அதிவேக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர்.

  • ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த இளம் வீரர் (23 வயது). இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இஷான் கிஷன் இரட்டை சதமடித்தபோது, அவருக்கு வயது 24.

  • இரட்டை சதமடித்த 5வது இந்திய வீரர் - (சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன்)

இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவருமே 50க்கும் குறைவான ரன்களையே அடித்திருந்தனர். முதல் இன்னிங்ஸின் முடிவில், இந்திய அணி 349 ரன்களை எடுத்திருந்தது.

350 என்ற இலக்கை துரத்தி விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு ஆட்டம் காட்டியது என்றே சொல்லலாம். இந்த பக்கம் ஒரு இரட்டை சதம் என்றால், அந்த பக்கமும் ஒரு சதம். கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?