Suresh Raina-வை புறக்கணிக்கும் லங்கா பிரிமியர் லீக் : விளம்பரத்துக்காக இந்திய வீரரா? Twitter
ஸ்போர்ட்ஸ்

Suresh Raina-வை புறக்கணிக்கும் லங்கா பிரிமியர் லீக் : விளம்பரத்துக்காக இந்திய வீரரா?

Antony Ajay R

சுரேஷ் ரெய்னாவின் பெயர் பட்டியலில் இருந்த போது ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் இலங்கையில் தொடங்கவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா தன் பெயரை பதிவு செய்துள்ளார். மொத்தம் 360 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த பட்டியலில் 11வது தொகுதியில் ரெய்னாவின் பெயர் இருந்தது. 

ஆனால் ஏலம் விடும் போது ஏலம் விடுபவரான சாரு ஷர்மா ரெய்னாவின் பெயரைக் கூறாமல் தவிர்த்துவிட்டார். இது சாரு ஷர்மாவின் தவறா அல்லது கடைசி நேரத்தில் ரெய்னா நீக்கப்பட்டாரா எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். 

சுரேஷ் ரெய்னா அல்லது எல்.பி.எல் நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ரசிகர்கள் எல்.பி.எல் நிர்வாகம் தங்களது விளம்பரத்துக்காக சுரேஷ் ரெய்னாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

 ரெய்னா ஒரு அனுபவமிக்க டி20 வீரர் என்பதை யாரும் மறுக்க முடியாது. பேட்டிங் மட்டுமல்லாமல் நல்ல ஆஃப்-ஸ்பின்னராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அவரது ஃபீல்டிங் திறமைகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

ஆனால் 2021ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரைத் தக்கவைக்கவில்லை. ரெய்னாவும் அதன் பிறகு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கெனவே 2020ம் ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா பிரிமியர் லீக் ஜூலை 31ம் தேதி தொடங்க இருக்கிறது. ஒருவேளை அடுத்தக்கட்ட ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் சேர்க்கப்படலாம். ஏற்கெனவே ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னாவை எந்த அணிதான் விட்டுக்கொடுக்கும்?

எல்.பி.எல் தொடருக்கு வேறெந்த இந்திய வீரரும் பெயரைப் பதிவு செய்யவில்லை. பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் இந்த தொடரை விளையாட இருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?