இந்தியா ஓர் அகிம்சைவாத நாடு. மகாத்மா காந்தி பிறந்த மண். இங்கெல்லாம் அடிதடி தொலைக்காட்சித் தொடர்கள் ஒத்துவருமா..? எனப் பலரும் கேட்ட காலம் உண்டு.
ஆனால், உலக அரங்கில் புகழ்பெற்ற மல்யுத்த போட்டியிலேயே பல இந்தியர்கள் கால்பதித்து வெற்றிவாகை சூடத் தொடங்கியுள்ளார்கள். அதில் முதலாமவர் மற்றும் முத்தாய்ப்பானவர் பஞ்சாப் சிங்கம் தி கிரேட் காலி.
WWE ஹெவி வெயிட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி, இந்தியர்களுக்கு இந்த சர்வதேச போட்டியில் களம் அமைத்துக் கொடுத்த பிதாமகர். இவர் WWE உலக ரசிகர்களால் பெரிதும் போற்றப்படும் அண்டர்டேக்கருடன் போட்டியிட்ட காட்சிகள் இன்றுவரை இந்தியர்கள் மனதை வருடிப் பார்க்கும் வீடியோக்கள். கடந்த 2021ஆம் ஆண்டு இவர் WWE ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தத்தை சுவாசிக்கும் குடும்பத்திலிருந்து வந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கனடா நாட்டைச் சேர்ந்த வீரர் இவர். தி கிரேட் காமா என்றழைக்கப்படும் காமா சிங் இவரது உறவினர். இப்போது வரை WWE போட்டியில் ஒரு வெற்றிகரமான வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு உலக சாம்பியன் பட்டத்தையும், ஒரு அமெரிக்க சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார் ஜிந்தர் மஹால்.
WWE போட்டியில் களம் கண்ட முதல் இந்திய வம்சாவளிப் பெண் இவர்தான். கடந்த 2017ஆம் ஆண்டு WWE ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதே ஆண்டு மே யங் கிளாசிப் மற்றும் ரெஸ்டில் மேனியாவின் வுமென்ஸ் பேட்டில் ராயல் போட்டிகளில் பங்கெடுத்தார். இன்று இந்தியர்கள் கொண்டாடும் வீராங்கனைகளில் ஒருவராக இருக்கிறார்.+
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பிறந்த கீழ் நடுத்தர குடும்ப இளைஞர், இன்று உலகம் கொண்டாடும் மல்யுத்த வீரர். ஈட்டி எறியும் வீரராக விளையாட்டு உலகில் தன் வாழ்கையைத் தொடங்கி, மில்லியன் டாலர் ஆர்ம் போட்டியில் வென்று பேஸ் பால் வீரராக வேண்டும் என்கிற கனவோடு அமெரிக்காவுக்குச் சென்று, தற்போது மல்யுத்தத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிக் பாக்ஸிங் சாம்பியனான செளரவ் குஜ்ஜர் தற்போது WWE NXT போட்டிகளில் 'சங்கா' என்கிற பெயரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். விரைவில் மல்யுத்த உலகில் தனக்கான இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp