IPL: தூள் கிளப்பிய ஷர்துல்; தடுமாறிய RCB - இயல்பு நிலைக்கு திரும்பியதா பெங்களூரு அணி? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

IPL: தூள் கிளப்பிய ஷர்துல்; தடுமாறிய RCB - இயல்பு நிலைக்கு திரும்பியதா பெங்களூரு அணி?

மும்பையுடன் மோதி முதல் போட்டியில் வென்றாலும், தற்போது அதிசொதப்பலாக விளையாடி தோற்றதால், அணி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக தாறுமாறாக டிரால் செய்து வருகின்றனர் இணைவாசிகள்

Keerthanaa R

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஒரு பக்கம் கொல்கத்தாவின் அபாரமான ஆட்டத்தை புகழ்ந்து வரும் ரசிகர்கள், ஆர் சி பி அணி ‘இயல்பு நிலைக்கு’ திரும்பிவிட்டது என சரமாரியாக டிரால் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் 2023ன் 9வது போட்டியில் நேற்று கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஹோம் கிரவுண்டான ஈடன் கார்டன்ஸில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். ஆனால் வெங்கடேஷ் ஐயர், அவருக்கு பிறகு வந்த மந்தீப் சிங், நிதீஷ் ராணா என அனைவரும் ஏமாற்றமளித்தனர். மறுப்பக்கம் குர்பாஸ் பெங்களூரு பந்துவீச்சாளர்களை பந்தாடிக்கொண்டிருந்தார்.

இருப்பினும் மோசமான ஸ்கோரில் இருந்த கொல்கத்தா அணிக்கு சேவியராக வந்தமைந்தார் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர்.

சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவரை டெல்லி அணி ரூ.10 கோடிக்கு வாங்கியிருந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு டிரேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தக்க நேரத்தில் களமிறங்கிய ஷர்துல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் 29 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். மறுப்பக்கம் இவருடன் ரிங்கு சிங்கும் கைக்கோர்க்க, 20 ஓவர் முடிவில் 204 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.

20 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தை அடைந்தார் ஷர்துல் தாக்கூர்.

பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கம் முதலே தட்டுத்தடுமாறியது. அதிக பட்சமாக அணி கேப்டன் டுப்ளெசிஸ் 23 ரன்கள் எடுத்திருக்கிறார் என்றால், ஆர்சிபி அவ்வளவு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்து 123 ரன்களுக்கு சுருண்டது பெங்களூரு அணி. கொல்கத்தா சார்பில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்கள், இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய சுயாஷ் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஷர்துல் பவுலிங்கிலும் மாஸ் காட்டினார். கொல்கத்தா அணி, 81 ரன்களில் இமாலய வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை விட, தற்போது பேசுபொருளானது ஆர்சிபியின் தோல்வி தான்.

மும்பையுடன் மோதி முதல் போட்டியில் வென்றாலும், தற்போது அதிசொதப்பலாக விளையாடி தோற்றதால், அணி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக தாறுமாறாக டிரால் செய்து வருகின்றனர் இணைவாசிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?