Virat Kohli: இரண்டு ஆண்டுகளுக்கு பின் RCB கேப்டனான விராட் - இது தான் காரணமா? Twitter
ஸ்போர்ட்ஸ்

Virat Kohli: இரண்டு ஆண்டுகளுக்கு பின் RCB கேப்டனான விராட் - இது தான் காரணமா?

Keerthanaa R

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று விளையாடும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி களமிறங்கியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆர்சிபி தலைமை பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி.

அதன் பிறகு அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் டுப்ளெசிஸ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் போட்டிக்கு பெங்களூரு அணியின் கேப்டனாக வந்து நின்றார் விராட்.

இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டுப்ளெசி ஏன் வரவில்லை? அவருக்கு காயமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. கடைசியாக சென்னைக்கு எதிராக விளையாடிய போட்டியில், காயத்துடனே டுப்ளெசி விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

டாஸ்ஸின் போது பேசிய விராட் இதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்

அதன்படி இன்றைய போட்டியில் விராட் கேப்டனாகவும், டுப்ளெசி இம்பாக்ட் பிளேயராகவும் களமிறங்குகின்றனர். முன்பே சொன்னதுபோல காயத்தின் காரணமாக டுப்ளெசிஸால் ஃபீல்டிங் செய்ய இயலாது என்பதால், இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது எனவும் விராட் தெரிவித்தார்.

ஆகையால் பெங்களூரு அணி பேட்டிங்கின் போது இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிவிட்டு, பௌலிங்கின் போது அவருக்கு பதில் வைசாக் விஜயகுமார் என்பவர் விளையாடுவார்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களம் வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?