விராட் கோலி டு ரோஹித் சர்மா: உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்கள் யார் யார்?
விராட் கோலி டு ரோஹித் சர்மா: உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்கள் யார் யார்? twitter
ஸ்போர்ட்ஸ்

விராட் கோலி டு ரோஹித் சர்மா: உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்கள் யார் யார்?

Keerthanaa R

உலகக்கோப்பை 2023 தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், தலா 8 புள்ளிகளுடன் உள்ளன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதில், இந்திய அணி வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்த உலகக்கோப்பையில், இதுவே விராட் கோலிக்கு முதல் சதம்.

இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்

ரோஹித் சர்மா, இந்தியா

இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 21 உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே 7 முறை சதம் அடித்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடரிலும் இவர் சதம் அடித்தார்.

ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், இந்தியா

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் 6 சதங்களுடன் இடம்பெற்றுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 45 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி, ஒரு முறை உலகக்கோப்பையை வென்றுள்லார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.

டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் டேவிட் வார்னர். இவர் இதுவரை 5 முறை உலகக்கோப்பையில் சதம் அடித்துள்ளார்.

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் அடித்த 163 ரன்களில் மூலம் இவர் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், மற்றும் இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககாரா ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்

ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா

முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனுமாக இருந்தவர் ரிக்கி பாண்டிங். இவர் இதுவரை 46 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி, 5 சதங்கள் அடித்திருக்கிறார்.

இவரது தலைமையில் ஆஸ்திரேலியா 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது

குமார சங்ககாரா, இலங்கை

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சங்ககாரா, 5 உலகக்கோப்பை சதங்களை அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் இருக்கும் மற்ற வீரர்கள்

  • சௌரவ் கங்குலி, இந்தியா - 4

  • ஏ பி ட்வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்கா - 4

  • மார்க் வா, ஆஸ்திரேலியா - 4

  • திலகரத்னே தில்சன், இலங்கை - 4

  • மஹெலா ஜெயவர்தனே, இலங்கை - 4

  • விராட் கோலி, இந்தியா - 3

நாளை இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. நாளைய போட்டி, உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் யாருக்கு முதலிடம் என்பதை தீர்மானிக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?