Cricket : பூஜ்ஜியம் ரன்களுடன் அவுட் ஆனால் டக் எனக் குறிப்பிடுவது ஏன் தெரியுமா? Twitter
ஸ்போர்ட்ஸ்

Cricket : பூஜ்ஜியம் ரன்களுடன் அவுட் ஆனால் டக் எனக் குறிப்பிடுவது ஏன் தெரியுமா?

Antony Ajay R

கிரிக்கெட் வீரர்களுக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத ஒரே வார்த்தை டக் என்பது தான். பேட்ஸ்மேன்கள் பூஜ்ஜியம் ரன்களை எடுக்கும் போது இந்த வார்த்தையைக் குறிப்பிடுகின்றனர்.

பலமுறை நமக்கு எதிரனியினர் வீழ்த்தப்படும் போது இந்த வார்த்தையைக் கூச்சலிட்டு கத்தியிருப்போம். நமக்கு பிடித்தமான வீரர் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனால் இந்த வார்த்தை நம்மை சோகமடையவும் செய்திருக்கும்.

வாத்தை குறிப்பிடும் வார்த்தையான டக் எப்படி கிரிக்கெட்டுக்குள் வந்தது தெரியுமா?

1866ம் ஆண்டு வேல்ஸின் இளவரசராக இருந்த ஏழாம் எட்வர்ட் ஒரு விளையாட்டில் பூஜ்ஜியதுடன் ராயல் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த நாள் செய்தி இதழ் "retired to the royal pavilion on a duck's egg." "வாத்து முட்டையுடன் ராயல் பெவிலியனுக்குத் திரும்பினார்" எனக் குறிப்பிட்டு எழுதியது.

அதவாது வாத்து முட்டையின் வடிவத்தை பூஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தனர். இந்த வாக்கியம் பிரபலமடைந்தது.

வாத்து முட்டை என்பதச் சுருக்கி வாத்து எனக் குறிப்பிடத்தொடங்கினர்.

1877ல் முதன் முதலாக ஒரு டெஸ்ட் மேட்சில் பூஜ்ஜிய ரன்களுடன் ஒருவர் அவுட் ஆனதை டக் எனக் குறிப்பிட்டனர்.

டக்கில் சில வகைகள் இருக்கின்றன. ஒருவர் முதல் பாலிலேயே அவுட் ஆனால் அதனை கோல்டன் டக் என்கின்றனர்.

டெஸ்ட் மேட்சின் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனால் ஜோடி ( pair ) என்றும் இரண்டிலும் கோல்டன் டக் ஆனால் ராஜா ஜோடி ( king pair ) என்றும் அழைக்கின்றனர்.

கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் வார்த்தை ஒரு பத்திரிகையாசிரியரின் சிந்தனையில் உதித்த சாதாரண சொல்லாடல் என்பது ஆச்சரியமளிக்கிறது அல்லவா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?