2022ல் ஐபிஎல்லில் அறிமுகம், அதன் பிறகு பிறந்த நாடான இலங்கை டி20 கிரிக்கெட் அணியில் வாய்ப்பு, 2023ல் சென்னை அணியின் அடையாளங்களில் ஒருவர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுடன் ஒப்பிடப்படும், பேபி மலிங்கா என்றழைக்கப்படும் மதீஷா பதிரானா யார்?
ஐபிஎல் அடையாளம் காட்டிக்கொடுத்த முத்துக்களில் ஒருவராக இருக்கும் இந்த 20 வயது இளைஞனை பற்றிய தொகுப்பு தான் இது!
இலங்கையின் கண்டி என்ற இடத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை அனுரா பதிரனா ஒரு தொழிலதிபர். அனுரா பதிரனா ஒரு இசைக்குழுவில் கித்தார் வாசிப்பவராகவும் இருந்தார்.
அவரது மனைவி மற்றொரு இசைக்குழுவில் ரிதம் கித்தார் வாசிப்பவராக இருந்தார். இந்த தம்பதிக்கு மதீஷா பதிரனாவை தவிர இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர் பியானோ கலைஞர் மற்றொருவர் கித்தார் கலைஞர்.
இதனால் பள்ளிப் பருவத்தில் இசையில் ஆர்வமுள்ள மாணவனாக இருந்தார்.
பதிரனாவின் பௌலிங் ஸ்டைல் ரைட் ஆர்ம் மீடியம்.
மிகச் சிறிய வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார் பதிரனா. ரணபீமா ராயல் காலேஜ் என்ற பள்ளியில் படித்தார். அங்கு தான் அவரின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. அப்போது பேஸ்பால் விளையாட்டிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
பள்ளி அணிக்கு விளையாடும்போது பேட்டிங் பௌலிங் இரண்டிலும் பயிற்சி பெற்றார் பதிரனா. இவரது திறனை கவனித்த பயிற்சியாளர், கிரிக்கெட் அகாதமியில் பதிரனாவை சேர்த்து பயிற்சியளிக்க பதிரனாவின் தந்தையிடம் கூறினார்.
அதன் பிறகு கேட்டராமா வேகப்பந்து வீச்சாளர் அகாதமியிலும் சேர்ந்தார் பதிரனா. அங்கு தான் இலங்கை அணியின் பௌலிங் பயிற்சியாளர் சமிந்தா வாஸ் பதிரனாவை அடையாளம் கண்டார்.
சமிந்தா வாஸ் பதிரனாவை கொழும்புவிலுள்ள பயிற்சி மையத்தில் சேர்க்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் பதிரனாவின் தந்தை மறுத்துவிட்டார்.
ஆனால் கண்டியிலுள்ள டிரினிட்டி காலேஜில் இடம் கிடைத்தது பதிரனாவுக்கு. அங்கிருக்கும்போது தான் இலங்கை அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச அணியில் கால்பதிக்க நேர்ந்தது
2020ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.
சர்வதேச அணியில் இடம்பெற்ற பின்னரும் தன் பள்ளியின் அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார் பதிரனா. அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் அவரது பள்ளி கோப்பையையும் வென்றிருந்தது.
இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட் லீகான எஸ் எல் சி இன்விடேஷனல் டி20 லீக்கில் 2021ஆம் ஆண்டு விளையாடினார் பதிரனா.
அதன் பிறகு 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 அணியில் இவரது பெயர் சேர்க்கப்பட்டது, ஆனால் காயம் காரணமாக விளையாடவில்லை.
அதே ஆண்டு ஆசியக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியை விளையாடினார்
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நியமிக்கப்பட்டார் பதிரனா.
நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னேவுக்கு பதிலாக அடிப்படை தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக களமிறக்கப்பட்டு சுபம்ன் கில்லின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ஆனால் அதிக போட்டிகளில் விளையாடவில்லை
ஐபிஎல்லில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இலங்கை அணி வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த ஆண்டும் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டார் பதிரனா. அணியின் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் விலகல்கள், பதிரனாவுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பை அளித்தது
தொடக்கம் முதலே தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதிரனா, சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்தார்.
தொடர்ந்து அணியின் விளையாடும் 11ல் இருந்து வரும் பதிரனா 16 முதல் 20 ஓவர்களில் இதுவரை 13 விக்கெட்களை வீத்தியுள்ளார். இந்த சீசனில் அதிகபட்ச ரெக்கார்ட் இது
கிட்ட தட்ட இந்த ஆண்டு சென்னை அணியின் அடையாளமாகவே மாறிவிட்டார் மதீஷா பதிரனா. ஓவ்வொரு போட்டியிலும், குறிப்பாக எம் எஸ் தோனி அவரின் தோள் மீது கைப்போட்டு சிரித்துக்கொண்டே ஏதோ பேசுவதும், அதன் பிறகு பதிரனா விக்கெட்டை வீழ்த்துவதோ, அல்லது பேட்ஸ்மனால் எதிர்கொள்ள முடியாத பந்தை வீசுவதும் வழக்கமான காட்சியாக மாறிவிட்டது.
ஒரு முறை போட்டி முடிந்து பேசிய தோனியிடம், பதிரனா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசியவர் தனிப்பட்ட முறையில் பதிரனா ரெட் பால் கிரிக்கெட் (டெஸ்ட் மேட்சுகள்) விளையாடவேக் கூடாது என்றார்.
ஒரு நாள் போட்டிகளிலும் அவரை அளவாக, பக்குவமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். ”பதிரனா போன்ற வீரர்கள் தங்கள் பௌலிங் ஸ்டைலை மாற்றுபவர்கள் இல்லை. அதனால் அவரை பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி செய்தால் இலங்கை அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார்.
அவர் பெரிய ஐசிசி டோர்னமெண்ட்களில் தேவைப்படுவார், அதனால் அந்த சமயங்களில் அவர் நல்ல உடற்தகுதியோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் தோனி.
2021ஆம் ஆண்டு பதிரனா பள்ளி பருவத்தில் விளையாடிய வீடியோ ஒன்று தோனியின் கண்ணில் படவே, அவரை சென்னை அணிக்குள் கொண்டுவர தோனி முனைப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது
முன்னால் இலங்கை அணி பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை போலவே இருக்கிறது பதிரனாவின் பௌலிங் ஸ்டைல். இதனாலேயே இவரை பேபி மலிங்கா என்று செல்லமாக அழைக்கிறது கிரிக்கெட் உலகம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust