World Cup'23: இந்திய அணியில் கடைசி நிமிடத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் அஷ்வின்- என்ன காரணம்? twitter
ஸ்போர்ட்ஸ்

World Cup'23: இந்திய அணியில் கடைசி நிமிடத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் அஷ்வின்- என்ன காரணம்?

Keerthanaa R

உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11ல் கடைசி நிமிடத்தில் இடம்பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டிருக்கிறார்.

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகின்றன. இம்முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.

உலகக்கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வந்தது. இந்தியாவுக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் மூத்த வீரர்கள் என்றால், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மட்டுமே. முற்றிலும் இளம் வீரர்கள், இதுவரை உலகக்கோப்பையில் இடம்பெறாத 6 வீரர்களை கொண்டு களம் காண காத்திருந்த இந்திய அணியில், தற்போது அஷ்வின் இடம் பெற்றிருக்கிறார்.

அணியின் தேர்வில் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்களுக்கு விமர்சனக்களும், கருத்துகளும் இருந்தன. குறிப்பாக அனுபவம் மிக்க வீரர்கள் ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின் போன்றவர்கள் இடம்பெறாததும் சற்றே ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கு பதிலாக இந்திய அணியில் தற்போது அஷ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். அக்சர் படேலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், கடைசி நிமிட மாற்றாக இது நடந்துள்ளது. ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது அக்சர் படேலுக்கு படுகாயம் ஏற்பட்டது.

ஆசியக்கோப்பை வெற்றிக்கு பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அதன் முதல் இரண்டு போட்டிகளில் அஷ்வின் விளையாடினார். இதுவே அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என்ற கணிப்புகளை அதிகரித்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தமிழக வீரர் இந்த தொடரில் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். சுமார் 18 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடினார் அஷ்வின்.

அதன் பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில், நாளை, செப் 30, இந்திய அணி விளையாடும் வார்ம் அப் போட்டியில் பங்குகொள்ள கௌஹாதி புறப்பட்டார் அஷ்வின். நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?