பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : எந்த மாவட்டம் முதலிடம்? - விரிவான தகவல் NewsSense
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : எந்த மாவட்டம் முதலிடம்? - விரிவான தகவல்

NewsSense Editorial Team

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு முடிவுகள் பிற்பகல் 12 மணிக்கு இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 93.76 சதவிகித பேர் பிளஸ் 2-விலும் 90.07 சதவிகிதம் பேர் பத்தாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் பத்தாம் வகுப்பில் 8.55%, பிளஸ் 2-வில் 5.36% அதிகமாக உள்ளது. பிளஸ் டூ தேர்வுகளில் 97.95 சதவிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 86.69 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் கடைசியிடம் பிடித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் - ஜெயக்குமார்

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே கூறினேன். யார் என்று கூறவில்லை. ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும். பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நடைபெறும். அதிமுகவில் ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர். நான் ஓ.பன்னீர் செல்வம் பக்கமும் இல்லை, எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை. கட்சி தான் எனக்கு முக்கியம். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. அவரைப் போல ஒ.பன்னீர்செல்வத்திற்கும் நடக்கும் என்று கூறுவது தவறு" எனக் கூறியிருக்கிறார்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகக் கடையடைப்புப் போராட்டம்

இராணுவத்துக்கு 4 வருட ஒப்பந்தத்தில் இளைஞர்களைச் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. , ஹரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்பட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்புவிடுத்திருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் இன்றும் நாடு முழுவதும் அமைதி வழியில் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செலென்ஸ்கி

நாங்கள் தயார் - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் 117-வது நாள்களாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. இதனால் உக்ரைனின் கிழக்குப் பகுதிகள், கடந்த பல வாரங்களாகக் கடுமையான போர் தாக்குதல்களால் உலுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி "இந்த வாரம் ரஷ்யா போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகளின் புதிய தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது. நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?