சென்னையில் 200 ஆண்டுகளுக்கும் முன்பு வந்த பனிப்பொழிவு குறித்து உங்களுக்குத் தெரியுமா? Twitter
தமிழ்நாடு

சென்னை: 200 ஆண்டுகளுக்கு முன்பே வந்த பனிப்பொழிவு குறித்து உங்களுக்குத் தெரியுமா?

Antony Ajay R

"சென்னை சரியான சூடு" என்ற சினிமா வசனம் இந்த ஊரின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இப்போது அதற்கு மாறாக குளுகுளு என ஊருக்கே இலவச ஏசி மாட்டியது போல மாறிவிட்டது தற்போது இருக்கும் வானிலை.

இப்போதிருக்கும் 24 டிகிரி செல்சியஸே தூங்கி எழுந்து ஊட்டிக்கு வந்துவிட்டோமா என நம்மை சிந்திக்க வைத்துக்கொண்டிருக்க, வரலாற்றில் ஒரு முறை சென்னையின் வெப்பநிலை 11 முதல் -3 டிகிரிக்கும் வரை குறைந்தது குறித்து நாம் அறிவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தானே!. அன்று சைதாப்பேட்டை சுவிட்சர்லாந்து போலவும் அடையார் அண்டார்டிகா போலவும் இருந்திருக்கலாம்.

சரி, சென்னையில் பனிப்பொழிவு எப்படி சாத்தியமானது? விடை தேடுகிறது இந்த கட்டுரை.

நீங்கள் நினைப்பது போல டிசம்பர் மாதத்தில் அந்த சம்பவம் நடக்கவில்லை. ஏப்ரல் 21, 1815 முதல் ஏப்ரல் 28, 1815 வரை தான் சென்னை குளிர்ந்திருந்தது. இதற்கு காரணம் அப்போது இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தான் என அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தோனேசியா தீவுக்கூட்டத்தில் மிகப் பெரிய எரிமைலையான தம்போரா வெடித்தது தான் இதற்கு காரணம். 4300 மீட்டர் உயரமான இந்த எரிமலை ஏப்ரல் 10,11 தினங்களில் வெடித்தது. இதன் சத்தம் 2000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கு கூட கேட்டதாகக் கூறுகின்றனர். இதன் லாவாவால் 12000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று வரையிலும் பதிவாகியுள்ள எரிமலை வெடிப்புகளில் மிகப் பெரிய வெடிப்பு மவுன்ட் தம்போரா வெடிப்பு தான் என்கின்றனர்.

தம்போரா எரிமலை வெடிப்புக் குறித்து கிலன் டி’ஆர்சி உட் என்பவர்  Tambora: The Eruption That Changed The World என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். அவர் கூறியதன் படி, எரிமலை வெடிப்பினால் பெருமளவு புகை வெளியாகி வளிமண்டலத்தின் உயரடுக்கில் கலந்துள்ளது. அந்த புகை காற்றுடன் சில நாட்களில் வங்காள விரிகுடா வரை நகர்ந்திருக்கிறது.

எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பின்விளைவுகளை நேரடியாக முதலில் எதிரொலித்தது சென்னை தான். வளிமண்டலத்தில் இருந்த சாம்பல் பூமியில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சியதால் காலநிலையில் மாற்ற ஏற்பட்டது. உலகம் முழுவதுமே அந்த ஆண்டு காலநிலை வெவ்வேறு மாதிரியாக மாற்றம் கண்டது.

பருவநிலை சுழற்சி அடுத்த ஆண்டும் சரியாக இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. சென்னையில் குளிர் நிலவிய அதே காலத்தில் உலகம் முழுவது பஞ்சம் ஏற்பட்டது. தம்போரா எரிமலை வெடிப்பினால் மறைமுகமாக 71000 பேர்வரை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் காலரா தொற்றுநோயும் பரவியதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

ஆங்கிலேய ஆட்சியின் எந்த அறிக்கையிலும் சென்னை வெப்பநிலை பதிவுசெய்யப்படவில்லை என்கிறது தி இந்து வலைத்தளம் அத்துடன் சென்னையில் தேங்காய் துருவல் போன்ற வெள்ளைப் பனிப்பொழிவு ஏற்பட்டது என்பது குளிரின் தற்குறிப்பேற்ற அணியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இப்போதும் இந்தோனேசியாவில் நிலநடுக்கமும் சென்னையில் குளிரும் ஏற்பட்டு வருகிறது. நாமும் "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..." என அடையார் ஆற்றில் டூயட் பாடலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustெற்றா

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?