சென்னையில் பரவி வரும் காய்ச்சல்  Twitter
தமிழ்நாடு

சென்னையில் திடீரென பரவி வரும் காய்ச்சல் - இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருக்கா?

Priyadharshini R

சென்னையில் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சலை போன்று அல்லாமல் ஒரு முறை வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி என நீடிக்கிறது.

பல மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதாக அச்சம் அடைந்தனர்.

தொடர் காய்ச்சலுக்கான காரணத்தை அறிய பொது சுகாதார துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.

ஆய்வுகளின் முடிவில் சென்னையில் பரவிவரும் காய்ச்சல், கொரோனாவோ, பன்றி காய்ச்சலோ இல்லை என்பதும், இது இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆஎஸ்வி வைரஸ் தொற்றும் பரவலாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று பரவி காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து அனைத்து விதமான வைரஸ் பரிசோதனையும் செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் சென்னையில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா வகை தொற்றுக்கான அறிகுறி

அதிக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் , தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல் போன்றவை இந்நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள்

வைரஸ் தொற்றின் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின் இந்த அறிகுறிகள் தென்படும்.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இவ்வறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும்.

இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

குழந்தைகளிடத்தில் குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?