சிவாஜி முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை: இணையத்தை கவர்ந்த முதியவரின் மூவீஸ் லிஸ்ட்!புகைப்படம் வைரல் ட்விட்டர்
தமிழ்நாடு

சிவாஜி டு ஜேம்ஸ் பாண்ட்: 20 ஆண்டு உலக சினிமாவை டைரியில் வைத்திருக்கும் முதியவர் - Wow Pic

Keerthanaa R

தான் தியேட்டருக்கு சென்று பார்த்த அத்தனை படத்தின் விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக சேகரித்து வைத்துள்ளார் ரசிகர் ஒருவர்.

அந்த குறிப்பில் இடம்பெற்றிருப்பவை அனைத்துமே 60களில் வெளியான ஆங்கிலம் மற்றும் தமிழ் திரைப்படங்கள்.

சினிமா என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது இந்நாளில். மொழி, சாதிய, தேசிய எல்லைகளை கடந்து இன்று எல்லா திரைப்படங்களையும் நாம் பார்க்கிறோம்.

சினிமா பற்றிய விழிப்புணர்வு, இந்த காலத்தில் இருப்பது போல நம் தாத்தா பாட்டி காலத்தில் இருந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் நாம் சொல்லுவோம். இருந்தது என்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

ட்விட்டரில் அக்‌ஷய் என்ற இளைஞர் ஒருவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அது அவருடைய தாத்தாவின் குறிப்பு என்று அவர் கூறியிருந்தார்.

அந்த புகைப்படத்தில் இருந்தது திரைப்படங்களின் தொகுப்பு. 1960களில் வெளியான திரைப்படங்கள். சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி, ஹாலிவுட் பெருந்தலைகளான ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் திரைப்படங்கள் வரை அவர் பார்த்திருக்கிறார்.

என்ன தேதியில், எந்த கொட்டகையில் (தியேட்டர்கள் வருவதற்கு முந்தைய காலத்தில் திரைப்படங்கள் திரையிடப்பட்ட இடம் கொட்டகை என்றழைக்கப்பட்டது), எவ்வளவு காசுக்கு டிக்கெட் வாங்கி, எந்த காட்சியை பார்த்தார், படத்தின் நீளம் என்ன என்பது வரை துல்லியமாக விவரங்களை தனது குறிப்பில் எழுதியிருக்கிறார்.

அக்‌ஷய் பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த பக்கத்தில், தொடர் எண் 254ல் தொடங்குகிறது. பக்கங்கள் இன்னும் நீள்கின்றன.

எனில் வாழ்நாளில் எத்தனை படங்களை அவர் பார்த்திருப்பார் என்று நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறது!

1958 ஆம் ஆண்டிலிருந்து 1974 வரை வெளியான படங்களை தனது தாத்தா பார்த்த படங்களின் தொகுப்பு இது என மற்றொரு ட்வீட்டில் அக்‌ஷய் குறிப்பிட்டிருந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

சினிமா உலகை நாம் இருக்கும் இடத்திலிருந்து பார்க்க ஒரு எளிதான சாளரம். அதனை முறையாக பயன்படுத்துவது நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?