Meena
Meena Twitter
தமிழ்நாடு

"எனக்கு வந்த நிலை யாருக்கும் வரக் கூடாது" - உடலுறுப்புகளை தானம் செய்யும் நடிகை மீனா

Antony Ajay R

சர்வதேச உடல் உறுப்பு தான தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு நடிகை மீனா வெளியிட்ட அறிவிப்பும் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவும் இணையவாசிகளை நெகிழ வைத்திருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையருள் ஒருவராக இருந்த மீனாவின் கணவர் கடந்த ஜூன் 29ம் தேதி மரணமடைந்தார். நுரையீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுறையீரல் கிடைக்காதது அவர் இறப்புக்கு காரணமாக அமைந்தது.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மனதளவில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற மீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்தது போல யாருக்கும் நிகழக் கூடாது என்பதற்காக தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருக்கிறார் மீனா.

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு மக்களை நெகிழச் செய்தது.

மீனா தனது பதிவில், "உறுப்பு தானம் என்பது ஒரு வரம். உயிரைக்காக்கும் உன்னதமான வழிகளில் ஒன்று. நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவருபவர்களுக்கு இது மறுபிறவி...நானும் இதை கடந்துவந்துள்ளேன்

மறைந்த என் கணவருக்கு நன்கொடையாளர் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை மாறியிருக்கும். ஒரு நன்கொடையாளர் 8 உயிர்களைக் காக்க முடியும். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புக்றேன்....

இன்று என் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளிக்கிறேன்.." என்று கூறியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!