சென்னை: பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்து தாக்கிய துணை நடிகை கைது ட்விட்டர்
தமிழ்நாடு

சென்னை: பேருந்தில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்கள் - கண்டித்து தாக்கிய துணை நடிகை கைது

வீடியோவில் நடிகை ஓட்டுநரிடம், "அவங்கள இறக்கி விடுங்க, செருப்பால அடிங்க, எப்படி தொங்கிட்டு வர்றாங்கனு பாருங்க" என்று கோபமாக பேசுவது பதிவாகியுள்ளது.

Keerthanaa R

சென்னை அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்து, தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேருந்துகளில் கூட்டம் அதிகமாகும் சமயத்தில் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இதனால், பல முறை உயிர் சேதங்கள், விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சாகசம் செய்கிறதாக நினைத்து ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

ஓட்டுநர்கள், நடத்துனர்கள், சக பயணிகள் மாணவர்களை கண்டிப்பதும், சில சமயங்களில் இவ்வாறு ஃபுட்போர்டு அடித்து கொண்டு வந்தால், பேருந்தில் இருந்து இறக்கி விடுவதும் நடக்கிறது தான்.

இருப்பினும் இந்த நிலை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் இவ்வாறு படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை அந்த வழியாக வந்த பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கவனித்துள்ளார்.

உடனடியாக பேருந்தை நிறுத்தச் சொல்லி மாணவர்களை கண்டித்தார் ரஞ்சனா. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

வீடியோவில் நடிகை ஓட்டுநரிடம், "அவங்கள இறக்கி விடுங்க, செருப்பால அடிங்க, எப்படி தொங்கிட்டு வர்றாங்கனு பாருங்க" என்று கோபமாக பேசுவது பதிவாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என்று கேட்ட நடிகை, நடத்துனரையும் சரமாறியாக திட்டுகிறார். மேலும் மாணவர்களை சட்டையை பிடித்து இழுத்து பேருந்தில் இருந்து இறங்கவைத்தார். அவர்களை நடந்தே செல்லும்படி கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இன்று காலை ரஞ்சனாவை மாங்காடு போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவர்களை தாக்கியதாகவும், தங்களை அவதூறாக பேசியதாகவும் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் ரஞ்சனா கைது செய்தனர். மாணவர்களை தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் இவர் துணை நடிகையாக நடித்திருந்தார். ரஞ்சனாவின் நோக்கத்தில் தவறில்லை என்றாலும், அவரது அணுகுமுறையில் தவறாக இருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?