ADMK: EPS முதல் அண்ணாமலை வரை; ஓ பன்னீர் செல்வத்தை காலி செய்த 6 பேர் - ஒரு ஷாக்கிங் லிஸ்ட் vikatan
தமிழ்நாடு

ADMK: EPS முதல் அண்ணாமலை வரை; ஓ பன்னீர் செல்வத்தை காலி செய்த 6 பேர் - ஒரு ஷாக்கிங் லிஸ்ட்

கிட்டத்தட்ட பன்னீர்செல்வம் அவர்கள் அரசியல் அனாதையாகிவிட்டார் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது. பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் விளையாடிய 6 பேரைக் குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

NewsSense Editorial Team

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பால், அந்தப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும், இனி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக கட்சியின் ஒற்றைத் தலைவர் என்றும் பரவலாகச் செய்திகளில் பார்க்க முடிகிறது. 

ஆனால், உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்றுதான் கூறியிருக்கிறார்களே ஒழிய, அப்பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுபடி ஆகும் என்று கூறவில்லை என பன்னீர்செல்வம் தரப்பினர் வாதிடுகிறார்கள். மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதில் எது சரி தவறு என்பது இன்னும் திட்ட வட்டமாக தெளிவாகும் வரை நாம் காத்திருப்போம். ஆனால், இதுவரை பன்னீர்செல்வத்தின் தவறான முடிவுகளால் அவருடைய அரசியல் வாழ்கையே அஸ்தமித்துவிட்டது என்று பலரும் வருத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட பன்னீர்செல்வம் அவர்கள் அரசியல் அனாதையாகிவிட்டார் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

அப்படி பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் விளையாடிய 6 பேரைக் குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

டிடிவி தினகரன்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமான பிறகு, அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது பன்னீர்செல்வம் முதல்வராக பதவியில் அமர்த்தபட்டார். சுமார் மூன்று மாத காலத்திற்குள்,  முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதில் டிடிவி தினகரனுக்கு மிகப்பெரிய பங்கு இருந்ததாகவும் அப்போதைய ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டன. 

எந்த டிடிவி தினகரனின் அறிமுகத்தால் அரசியலில் மிகப்பெரிய ஏறு முகத்தை தொட்டாரோ,  அதே டிடிவி தினகரன் உடனான மனக்கசப்பின் காரணமாக பன்னீர்செல்வம் தன்னுடைய இறங்கு முகத்திற்கான அடித்தளமிட்டார் என்றால் அது மிகையல்ல.

குருமூர்த்தி

முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்,  தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிட்டு,  ஜெயலலிதா சமாதியிலேயே தன்னுடைய தர்ம யுத்தத்தை தொடங்கினார் பன்னீர்செல்வம்.  இந்த ஐடியாவை கொடுத்தது சாட்சாத் ஆடிட்டர் குருமூர்த்தி தான்.  இதை துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் அவரே தன் வாயால் கூறிய காணொளிகளை இன்றும் யூடியூபில் காணலாம். 

சரி ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னது போலவே தர்ம யுத்தத்தை தொடங்கிய பன்னீர்செல்வம்,  தன் செல்வாக்கை முழுமையாக நிரூபித்து அப்போதே முதலமைச்சர் பதவியை பெற்ரிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக அண்ணா திமுகவின் கட்சித் தலைமை பொறுப்பையாவது ஆணித்தரமாக உறுதி செய்திருக்க வேண்டும். அப்படி மட்டும் செய்திருந்தால் பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை இத்தனை வேகமாக அஸ்தமித்திருக்காது.  ஆனால் விதி பன்னீர் செல்வத்தை  ஒன்றிய அரசு ரூபத்தில் வந்து தொந்தரவு செய்தது.

Modi

நரேந்திர மோடி

பன்னீர்செல்வம், தன் தர்மயுத்தம் வழியாக தனக்கான செல்வாக்கை ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் காட்டிக் கொண்டிருந்தபோது, நரேந்திர மோடியே இறங்கி வந்து,  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்து வைத்தார்.  இதையும் பன்னீர்செல்வம் தன் வாயால்சில முறை ஊடகங்களிடம் கூறியுள்ளார். 

தன்னுடைய முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதற்கு நீதி வேண்டி தன்னுடைய தர்ம யுத்தத்தை தொடங்கியவர், எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக வலிமையாக சாதிக்காமல்,  நரேந்திர மோடி கூறினார் என்கிற ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியோடு சமாதானம் செய்து கொண்டது பன்னீர்செல்வம் செய்த மிகப்பெரிய தவறு எனலாம். அந்த வகையில்  பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கைக்கு இறுதியஞ்சலி எழுதியதில் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

எடப்பாடி பழனிசமி

எடப்பாடி பழனிசாமியின் சாதூர்யம்

ஒரு வழியாக பாஜகவின் தலையீட்டுக்கு பிறகு அதிமுக இரட்டை தலைமையில் இயங்கத் தொடங்கினாலும்,  எடப்பாடி பழனிசாமி மிக உறுதியாக தன்னுடைய முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினார்.  

அதேபோல, அதிமுக கட்சி நிர்வாகத்திற்குள்ளும் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை உருவாக்கி,  பன்னீர் செல்வத்திற்கு இணையான அதிகாரத்தோடு தான் இருப்பதையும் உறுதி செய்து கொண்டது எடப்பாடி பழனிசாமியின் சாமர்த்தியம் தான்.  

இப்படி இந்த இரண்டு காரியங்களால் பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கைக்கு செக் வைத்து மூன்றாம் இடத்தில் உயர்ந்து நிற்கிறார் எடப்பாடியார்.

ஒருபக்கம் பன்னீர்செல்வத்தை சமாளித்த எடப்பாடி பழனிசாமி,  மறுபக்கம் கட்சிக்குள் இருக்கும் மூத்த நிர்வாகிகள், சீனியர் அமைச்சர்கள், கட்சித் தொண்டர்களில் முக்கியமானவர்கள் என பல தரப்பினரையும் மெல்ல தன் பக்கம் இழுத்து consolidate செய்து கொண்டே, 2016 - 21 ஆட்சி காலத்தை நிறைவு செய்து காட்டியது எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு மாஸ்டர் ஸ்ட்ரோக் எனலாம்.

அண்ணாமலை

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு தனி வேட்பாளரை முதலில் நிறுத்தச் சொன்னது, பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கச் சொன்னது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன எல்லாவற்றையும் கிளிப் பிள்ளை போலச் செய்து தனக்கு இருந்த மிச்ச சொச்ச மரியாதையையும், தொண்டர்களின் மதிப்பையும் இழந்தார் பன்னீர் செல்வம். 

ஆங்கிலத்தில் “last nail in the coffin” என ஒரு சொல் உண்டு. சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி என்பதை அதனுடைய பொருள். அப்படி பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையை முழுமையாக சரித்து, அவர் தனி மரமாக நிற்பதை, அண்ணாமலை அடித்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடைசி ஆணி உதவியது என்றால் அது மிகையல்ல.

OPS

தன் வாழ்கையை தானே செதுக்கிக் கொண்ட பன்னீர்செல்வம்

என்னப்பா… அண்ணாமலை பத்தியிலேயே கடைசி அணி அடித்தாகிவிட்டது என்று கூறினீர்களே, பிறகு முதலிடத்தில் பன்னீர்செல்வத்தை ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா..? அரசியலோ,  வியாபாரமோ,  தொழிலோ,  விளையாட்டோ…  அந்தத் துறையில் மிகப் பெரிதாக சாதிப்பவர்கள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் ஆலோசனைகளை பெறுவர்.  ஆனால் கடைசி முடிவை அந்த தலைவர் தான் எடுப்பார்.  

எடுத்த முடிவு அவ்வப்போது முன்பின் போகலாம், அவ்வளவு ஏன் முழுமையாக கூட சொதப்பலாம்.  எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதும், எடுத்த முடிவில் நிறைய சொதப்பல்கள் ஏற்பட்டால் அதை திருத்திக் கொண்டு தன் அணியை மீண்டும் வலிமையோடு எழச்செய்வதுமே ஒரு நல்ல தலைவனுக்கான அழகு.

பன்னீர் செல்வமோ மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும்,   இந்த தகுதிகளை அவர் வளர்த்துக் கொண்டதாக தெரியவில்லை. டிடிவி கூறினார் ராஜினாமா செய்தேன்,  குருமூர்த்தி கூறினார் தர்மயுத்தம் தொடங்கினேன்,  பிரதமர் கூறினார் எடப்பாடியாரோடு ஒன்றிணைந்தேன்… என எல்லாப் பழிகளையும் வேறு ஒரு நபர் மீது போட்டுவிட்டு தனக்கு ஏதும் தெரியாத பிள்ளை போல முகத்தை வைத்துக் கொள்கிறார்.

தன்னை நம்பி சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஓபிஎஸ் பின்னால் நிற்கும்போது, அவர்களுக்கு ஒரு தலைவனாக முன் நின்று பாதுகாப்பு வழங்குவதும் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் அவர்களுக்கான முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுப்பதும் மிகவும் அவசியம். அதையும் அவர் செய்யவில்லை. கட்சிக்குள் இத்தனை ஆண்டு காலம் பல பதவிகளில் இருந்தும், கட்சித் தொண்டர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையை தன் பின் திரட்டி தன் வலிமையை நிரூபித்திருக்க வேண்டும்.  அப்படி கட்சி தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் தன் பக்கம் இழுக்க தவறிவிட்டார் பன்னீர்செல்வம். 

இன்று ஒரு வயதான அரசு அலுவலக உதவியாளரை போல, அரசியலில் அனாதை ஆக்கப்பட்டு, கேட்பாரின்றி கலை இழந்து தனியாக நிற்கிறார். போதாக்குறைக்கு பன்னீர்செல்வம் ஒரு நிர்வாகத் திறனற்ற, அரசியல் தெளிவு இல்லாத, மற்றவர்களின் சொல் பேச்சு கேட்ட நடக்கும் சுய புத்தி இல்லாத, எவராலும் அன்பும் ஆதரவும் காட்டப்படாத நபர்…. என்பதும் பொதுவெளியில் அம்பலமாகிவிட்டது. 

இத்தனை பிரச்சனைகளையும் மீறி,  ஓ பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக அரசியலிலோ அல்லது தேசிய அரசியலிலோ சொல்லிக் கொள்ளும்படி எதையாவது சாதித்தார் என்றால்,  நிச்சயம் அவர் பழைய பன்னீர் செல்வமாக தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதே வருத்தமான செய்தி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?