பழமையான Theppakkadu Elephant Camp: இங்கு சுற்றுலா பயணிகள் குவிய காரணம் என்ன?
பழமையான Theppakkadu Elephant Camp: இங்கு சுற்றுலா பயணிகள் குவிய காரணம் என்ன? ட்விட்டர்
தமிழ்நாடு

பழமையான Theppakkadu Elephant Camp: இங்கு சுற்றுலா பயணிகள் குவிய காரணம் என்ன?

Keerthanaa R

திரைப்படங்களும், யூடியூப் வ்லாக்குகளும் நிறைய அறியப்படாத சுற்றுலா தலங்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சில நமக்கு தெரிந்த இடங்களை நினைவுப்படுத்தியிருக்கிறது.

அப்படி, தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் நமக்கு நினைவுப்படுத்தியது முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை.

தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான சுற்றுலா தலம். முகாமை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம்

எப்பொது உருவாக்கப்பட்டது?

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதிக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் 1923ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இங்கு இன்றைய தேதியில் 24 யானைகள் உள்ளன. தெப்பக்காடு யானைகள் முகாம் தான் ஆசியாவின் மிகப் பழமையான யானைகள் காப்பகம் ஆகும்

மறுவாழ்வு மையம்

இந்த முகாம் யானைகளின் மறுவாழ்வு மையமாகவும் செயல்படுகிறது.

அதாவது, வனப்பகுதியில் உடலநலக் குறைவோடு, அல்லது படுகாயங்களோடு கண்டறியப்படும் யானைகள், மீட்கப்பட்ட யானைகள் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந்த தெப்பக்காடு யானைகள் முகாம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, காடுகளில் மரங்கள், மரக்கட்டைகள் போன்றவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்ல பயிற்சியளிப்பதற்காக தான்

சுற்றுலா தலம்

தெப்பக்காடு யானைகள் முகாம் தற்போது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக மாறிவிட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானைகள் விளையாடுவதை, குளிக்கவைக்கப்படுவதை, சாப்பிடுவது போன்ற விஷயங்களை கண்டு ரசிக்கலாம்.

காட்டுப்பகுதிக்குள் எலிபண்ட் சஃபாரி, யானைகள் மீத அமர்ந்து சிறிய ரைடுகள் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

இங்கு இருக்கும் யானை காப்பாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு யானைகள் குறித்தும், அதன் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குக்கின்றனர். விருப்பமிருந்தால் இங்கு யானை பாகர்களுக்காக நடத்தப்படும் ஒர்க்‌ஷாப்களிலும் நாம் கலந்துகொள்ளலாம்.

தெப்பக்காட்டுக்கு எப்படி செல்வது?

தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு ஆகாய மார்க்கமாகவும், சாலை மற்றும் ரயிலில் சென்றடைய முடியும்

முகாமுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம், கோவை சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து ஊட்டி சென்று அங்கிருந்து டாக்சிகள் அல்லது பேருந்துகள் மூலமாக முகாமை அடையலாம்.

கோவையிலிருந்து ஊட்டிக்கு ரயிலில் சென்று அங்கிருந்து முகாமுக்கு பேருந்துகளிலோ வாடகை கார் மூலமாகவோ செல்லாம்.

அல்லது கோவை, பெங்களூரு மைசூரு போன்ற ஊர்களில் இருந்து சாலை வழியாக இந்த முகாமை அடை வழிகள் உள்ளன.

இந்த முகாமுக்கு செல்பவர்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், ஊட்டி, போன்ற இடங்களை சுற்றிப்பார்ப்பதுமல்லாமல், சமீபத்தில் ஆஸ்கர் வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் நாயகர்கள் பொம்மன் பெள்ளியையும் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?