கமலாத்தாள் Twitter
தமிழ்நாடு

கோவை: ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு - ஆனந்த் மகிந்திராவின் அன்னையர் தின சர்ப்ரைஸ்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 10 2019ல் கமலாத்தாள் குறித்த வீடியோ ஒன்றைப் பதிவிட்ட மகிந்திரா, கமலாத்தாளின் தொழிலில் முதலீடு செய்ய நான் விரும்புகிறேன் என குறிப்பிடப்பட்ட ஒரு ட்விட்டை பதிவிட்டிருந்தார்.

Antony Ajay R

கோவை ஆலந்தூரையடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்த 85 வயது முதியவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாகப் பசித்தவர் அனைவருக்கும் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார் இவர். இந்த பாட்டிக்கு அன்னையர் தினத்தை முன்னிட்டு தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

அரசாங்கத்துக்கு முன்பே 1 ரூபாய் இட்லி திட்டத்தை ஆரம்பித்த பாட்டி இன்றும் 1 ரூபாய்க்குத் தான் உணவளித்து வருகிறார். அவரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவர் மிகவும் பிரபலம். கமலாத்தாள் குறித்து சமுக வலைத்தளங்களில் செய்தி பரவியதையடுத்து அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் பிரபலங்களும் அவரது சேவையை வாழ்த்தினர்.

அந்த வரிசையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவும் அவரை வாழ்த்தியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 10 2019ல் கமலாத்தாள் குறித்த வீடியோ ஒன்றைப் பதிவிட்ட மகிந்திரா, கமலாத்தாளின் தொழிலில் முதலீடு செய்ய நான் விரும்புகிறேன் என குறிப்பிடப்பட்ட ஒரு ட்விட்டை பதிவிட்டிருந்தார்.

மூன்று ஆண்டுகள் கழித்தும் அந்த வாக்கை மறந்திடாத மகிந்திரா, இப்போது அவருக்கு வீடு கட்டுக்கொடுத்துள்ளார். அந்த வீட்டில் அவர் இட்லி சமைப்பதற்கான வசதிகளும் உள்ளது. வீட்டைப் பரிசளித்ததுடன் அது குறித்த வீடியோவையும் மகிந்திரா வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவை, “எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவருக்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை.” எனத் தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?