புயல் Twitter
தமிழ்நாடு

Morning News Today: வங்க கடலில் உருவான ‘அசானி' புயல்; தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

NewsSense Editorial Team

வங்கக் கடலில் உருவான ‘அசானி' புயல்; தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரமடைந்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சட்டமன்றம்

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று: காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைமீது விவாதம்!

தமிழக சட்டமன்றத்தில், கடந்த மார்ச் 18-ம் தேதி பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து மார்ச் 21-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. ஏப்ரல் 6-ம் தேதி முதல் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடந்துவருகிறது. அதைாயொட்டி இன்றும், நாளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்லத் தடை நீங்கியது!

தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது தருமபுரம் ஆதீனத்தைப் பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து, மடத்தைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும், தோளில் தூக்கிச் செல்வர். அந்த நேரத்தில் ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். 500 ஆண்டுகாலமாக இந்த விழா நடந்து வருகிறது. இதற்கிடையில், இந்நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, விழாவில் ஆதீனத்தைப் பக்தர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு மதுரை ஆதீனம், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தடையை நீக்க வலியுறுத்தின. சட்டமன்றத்தில் அதிமுக சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதை பாமக, பாஜக ஆதரித்தன. பல மட ஆதீனங்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். இந்நிலையில், விதிக்கப்பட்ட தடையை நீக்கி நேற்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

நீதி

புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் ஐகோர்ட் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் நீதிபதிகள் சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர்.

ஜான் லீ

ஒற்றை வேட்பாளராகப் போட்டியிட்டு ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்வு!

ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்தது. அப்போது, விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை, அங்கு சுந்திரம் இருக்க வேண்டும். பேச்சு சுதந்திரம் போன்ற உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் கடுமையான சட்டங்களை சீனா அமல்படுத்தியிருக்கிறது. ஹாங்காங் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை. சீனா தேர்தல் என்ற பெயரில் ஒன்றை நடத்தி, தலைவரை (தலைமை நிர்வாகி) அறிவித்து ஆட்சி செய்து வருகிறது. அங்கு 2017-ம் ஆண்டு தலைவர் பதவியில் கேரி லாம் இருந்து வந்தார். சீனாவின் தீவிர ஆதரவாளர் இவரின் பதவிக்காலம் முடிந்தது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்தத் தேர்தலில் சீனாவின் தீவிர ஆதரவாளரான ஜான் லீ கா சியு களமிறக்கப்பட்டார். ரகசிய வாக்கெடுப்பின்போது, சுமார் 1,500 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் தான் (ஒட்டுமொத்தமாக அனைவரும் சீன ஆதரவாளர்கள்தான்) புதிய தலைவரைத் தேர்வு செய்யும்.இந்த தேர்தலில் ஜான் லீ மட்டுமே போட்டியிட்டார். வேறு யாரும் போட்டியிடவில்லை. நேற்று காலை 9 மணிக்கு தேர்தல் நடந்தப்பட்டு, உடனடியாக முடிவும் அறிவிக்கப்பட்டது. ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1,416 ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

CSK

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?